சர்வ பித்ரு அமாவாசை
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, இந்த சர்வ பித்ரு அமாவாசை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களை வழங்க கூடியது. சர்வ பித்ரு அமாவாசை நிகழும் சூரிய கிரகணம் பல அற்புதமான பலன்களை வழங்குகிறது. பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அருப்புதமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சர்வ பித்ரு அமாவாசை பலன்கள்:
சர்வ பித்ரு அமாவாசை, பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணம் ஆகும். இது பித்ரு பக்ஷ அல்லது சர்வ பித்ரு அமாவாசையின் கடைசி நாளான அக்டோபர் 14 அன்று நிகழ்கிறது. இந்த கிரகணம் இரவில் நிகழ கூடியது. இதனால் ஷ்ராத் கர்மா மற்றும் தர்ப்பணத்தில் பலன்கள் மிக குறைவு.
பொதுவாக, கிரகணத்தின் சூதக் காலத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே தொடங்குகிறது, ஏனெனில் இந்த சூரிய கிரகணம் ஒரு பெனும்பிரல் கிரகணமாக இருக்கும், இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இந்த கிரகணம் இரவு 8:34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 02:25 மணி வரை நீடிக்கும்.
பொதுவாக, சூரிய மற்றும் சந்திர கிரகணம் எதிர்மறையான ஆற்றலுடன் தொடர்புயுடையது. இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த கூடியது.
ஆனால் சில ராசிக்காரர்கள் மட்டும் இந்த சூரிய கிரகணத்தால் மகத்தான பலன்களை அடைவார்கள். இந்த சூரிய கிரகத்தின் மூலம் அதிஷ்டமான பலன்களை பெற போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சர்வ பித்ரு அமாவாசையால் மேன்மை அடைய போகும் ராசிகள்:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள், சர்வ பித்ரு அமாவாசை மிக சிறப்பான பலன்களைத் தரக்கூடியது. இந்த கிரகணம் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பை வழங்க கூடிய காலமாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தோயகத்தில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள்.
சிம்மம்:
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் ஏற்படும் சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காத பலன்களை தரக்கூடியது. மன நிம்மதி அதிகரிக்கும். செல்வ நிலை உயரும். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாதவர்கள் வரும் காலங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரங்கள் செலவிடுவீர்கள். தொழில் கணிசமான லாபத்தை வழங்க கூடியதாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சர்வ பித்ரு அமாவாசை மிக அற்புதமான வளங்களை அள்ளித்தரும். உங்கள் வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், செல்வாக்கு போன்றவை வரும் கால கட்டங்களில் உயரும். அவர்களின் வாழ்க்கை செல்வம், ஆரோக்கியம், பொருள் இன்பம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகும். பூர்விக சொத்து பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |