சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை..! Sashti viratham in tamil..!

சஷ்டி விரதம் இருப்பது எப்படி

மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை..! Sashti viratham in tamil..!

சஷ்டி விரதம் இருப்பது எப்படி? இந்த சஷ்டி விரதம் மாத நாட்களிலிலும் வரும். அதேபோல் தீபாவளியை அடுத்த பிரதமை நாளில் சஷ்டி விரதம் தொடங்கப்படுகிறது. இவற்றை மகா சஷ்டி விரதம் என்பார்கள். சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.

பல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன…

 

“சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கான அர்த்தம் என்னவென்றால், சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில்) கரு உருவாகும் என்பதே அர்த்தமாகும்.

சரி இங்கு சஷ்டி விரதம் இருப்பது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

பயன்கள்:-

குழந்தை வரத்திற்காக மட்டும்தான் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் வீட்டில் நிம்மதி, செல்வம், ஒற்றுமை மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெருக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சஷ்டி விரதம் என்பது பொதுவாக 6 நாட்கள் கடைபிடிக்கப்படும். ஏழாவது நாள் அழகர் முருகனின் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் மட்டுமாவது, ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்கலாம். திருமணம் ஆகாதவர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

செல்வம் பெருக தாந்த்ரீக பரிகாரங்கள்..!

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 1

நாம் விரதம் இருக்கக் கூடிய இந்த ஆறு நாட்களிலும் காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்யவேண்டும்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 2

பூஜைக்கு ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கற்கண்டு, பழ வகைகள் எதுவாக இருந்தாலும் சரி படைக்கலாம்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 3

இவை எதுவுமே இல்லை என்றாலும் சரி. சர்க்கரை மட்டும் வைத்துக் கூட பூஜை செய்யலாம். விரத நாட்களில் தினம் ஒரு முறையாவது சஷ்டி கவசம் பாடுவது மிகவும் சிறப்பு.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 4

விரதத்தை மேற்கொள்ளும் முறை என்பது அவரவர் உடல் நிலையை பொறுத்து தான் பின்பற்ற வேண்டும். இந்த 6 நாட்களிலும் வெறும் பால், பழம் இவற்றை மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பவர்களும் உள்ளார்கள். அல்லது மதியம் ஒரு வேளை மட்டும் தயிரும், சாதமும் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பவர்களும் உள்ளார்கள்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 5

இப்படி உங்களால் முடிந்தவரை விரதத்தை பின்பற்றிக் கொள்ளலாம். இவை எதையுமே பின்பற்ற முடியாதவர்கள் அசைவ சாப்பாட்டை மட்டுமாவது தவிர்க்கலாம். இந்த விரதத்தை சிலர் ஆறு நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கூட கடைபிடிக்கிறார்கள்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி குறிப்பு: 6

சிலர் கடுமையான விரதம் இருப்பவர்கள் முதல் நாள் ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு, அடுத்து 3,4,5,6 என மிளகு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பவர்களும் உண்டு.

எங்கு விரதம் எடுக்கலாம்?

திருப்பரங்குன்றம், பழனி போன்ற ஆறுபடை வீடு கோயிலில் சென்று இருக்கலாம். அல்லது வீட்டில் கூட சஷ்டி விரதம் இருக்கலாம்.

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

குறிப்பு:-

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இவர்கள் எல்லாம் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நாம் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேற, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, அந்த முருகப் பெருமானை நினைத்து விரதமிருந்து பிரார்த்தனை செய்வதோடு, அதற்கான முயற்சியில் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து ஈடுபட வேண்டும். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal