வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்யலாமா..?

Updated On: March 4, 2024 7:25 PM
Follow Us:
sasti viratham andru thirumanam seiyalama in tamil
---Advertisement---
Advertisement

சஷ்டி விரதம் அன்று இதை செய்யலாமா..?

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் பதிவின் வாயிலாக பல ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நாம் வணங்கும் கடவுள்களில் தமிழ் கடவுள் என்று அழைப்பது முருகப்பெருமானை தான். இவ்வுலகில் முருக பெருமானுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் பக்தர்கள், முருக பெருமானுக்கு உகந்த நாட்களில் அதாவது, கார்த்திகை, சஷ்டி அன்று விரதம் இருப்பார்கள். இப்படி விரதம் இருப்பதால் சகல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் சஷ்டி விரதம் அன்று நல்ல காரியங்கள் செய்யலாமா என்று சிலருக்கு கேள்வி இருக்கும். அதாவது சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்யலாமா..? இதே கேள்வி உங்களிடம் இருந்தால் அதற்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திருமணம் செய்ய உகந்த மாதம்

சஷ்டி அன்று திருமணம் செய்யலாமா..? 

சஷ்டி அன்று திருமணம் செய்யலாமா

பெரும்பாலும் நம்மில் பலரும் சஷ்டி விரதம் அன்று விரதம் இருந்து வேண்டி கொள்வார்கள். சஷ்டி விரதம் இருப்பது அவ்வளவு நன்மைகள் தரும் என்று நம்பப்படுகிறது.

கந்த சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடைகள் நீங்கும். குழந்தை பாக்கிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எதிரிகள் தொல்லை ஒழியவும், நோய், கடன் பிரச்சினை தீரவும் சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

இப்படி சஷ்டி விரதம் அன்று நல்ல நாளாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் நம்மில் சிலருக்கு சஷ்டி விரதம் அன்று சில நல்ல காரியங்கள் செய்யலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருக்கும்.

அதுவும் இன்றைய நிலையில், முருக பக்தர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் சிலர் சஷ்டி அல்லது கார்த்திகை அன்று சில நல்ல விஷயங்கள் செய்யலாம் என்று நினைப்பார்கள்.

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

அதாவது திருமணம், நிச்சயம் செய்வது, பெண் பார்க்க செல்வது, இதுபோன்ற நிகழ்வுகள் செய்யலாமா என்று நம் அனைவருக்குமே கேள்வி இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்யலாமா என்ற கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.

  • சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்வது என்பது மத்தியமான பலனைத் தரும். அதுபோல இறைவனை வழிபடுவதற்கு சஷ்டி சிறப்பான நாள் ஆகும்.
  • அதுபோல சுப நாட்களில் வரும் சஷ்டி திதியன்று அன்று தாராளமாக திருமணம் செய்யலாம். மேலும் மற்ற சுப நிகழ்ச்சிகளையும் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now