கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா..?

Advertisement

Sathayam Natchathiram

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அதிலும் நாம் அனைவருக்கும் நம்முடைய எதிர்காலம் ஆனது எப்படி அமையப்போகிறது என்ற ஆர்வம் இருக்கும். இத்தகைய எதிர்கால பலன்களை நாம் அனைவரும் ஆன்மீகம் வாயிலாக நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக்கொள்வோம். காலசக்கரத்தில் 12 ராசிகளும் அதற்கு ஏற்ற மாதிரியான 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்திற்கும் குணங்கள் முதல் மற்ற பலன்கள் என அனைத்தும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ராசியில் 11-வது ராசியாக கோவில் கலசத்தினை அடையாளமாக கொண்டிருக்கும் கும்ப ராசியில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

சதயம் நட்சத்திரம் குணங்கள்:

 சதயம் நட்சத்திரம் குணங்கள்

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதியாக ராகு பகவான் இருப்பதால் இவர்கள் உடல் மற்றும் மனது அதிக வலிமை கொண்டவராக இருப்பார்கள். 

  • இவர்கள் பிறரிடம் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமை என நினைத்து பழகும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
  • அதுமட்டும் இல்லாமல் அதிக சிந்தனை திறன் மற்றும் புத்திசாலி தனம் கொண்டவராக இருப்பதால் எந்த செயலிலும் வெற்றி காண வேண்டும் என்ற நோக்கத்தோடும் செயல்படுவீர்கள்.
  • பொதுவாக இவர்கள் செய்யும் எந்த செயலையும் பாதியிலேயே விட்டு விடாமல் கடைசி வரை முடித்து விட்டு தான் ஓய்வார்கள்.
  • அதிகமாக இரக்கம் குணம் கொண்டவராகவும், பிறரின் பொருட்கள் அல்லது சொத்துக்களுக்கு ஆசைப்படாத குணம் கொண்டவராகவும் மற்றும் மற்றவருக்கு உதவும் மனப்பக்குவம் கொண்டவராகவும் திகழ்வார்கள்.
  • மற்றவர்களை இழிவு படித்து பேசுவதை விரும்பாத குணம் கொண்டவராகவும், ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவராகவும் இருப்பார்கள்.
  • ஆன்மீக முறைப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஸ, ஸி, ஸீ மற்றும் கோ ஆகிய எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

கல்வி:

கல்வியை பொறுத்தவரை அதிகமாக கற்கவில்லை என்றாலும் கற்கும் கல்வியில் அதிகமான நாட்டத்துடன் கற்று நல்ல நிலையினை அடைவார்கள். மேலும் இவர்கள் மற்ற துறையில் நல்ல வல்லமை பெற்றவராக இருப்பார்கள்.

திருமண வாழ்க்கை:

இவர்களுக்கு காதல் வாழ்க்கை ஆனது விரும்பக்கூடிய ஒன்றாக இருந்தாலும் வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வார்கள்.

வீட்டில் உள்ள அனைவரிடமும் அதிக பாசத்தோடு பழகுவீர்கள். குறிப்பாக மனைவி, பிள்ளைகள் இவர்களிடம் தான். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக அனைத்தினையும் விட்டு கொடுப்பார்கள்.

உடல் ஆரோக்கியம்:

சத்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று முன்கோபம் உடையராக இருப்பது போல திடீரென்று உடல் நல குறைபாடுகள் ஏற்படும்.

தொழில்:

தொழில் அல்லது வியாபாரம் ரீதியாக நல்ல லாபம் மற்றும் வருமானத்தை பெறக்கூடியவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:

மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முஷீயமாம்ருதாத்.

அதிர்ஷ்டமான நிறம்:

கும்ப ராசி சத்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நிறம் கருப்பு.

அதிர்ஷ்டமான எண்:

1,4,7 இந்த மூன்று எண்களும் இவர்களுக்கான அதிர்ஷ்டமான எண் ஆகும்.

ராசி கல்:

கோமேதக கல் என்ற கல் பதித்த மோதிரம் ராசியானது ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement