சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை தான்..! நீங்கள் இந்த ராசியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க..!

Advertisement

Saturn Aspect Will Affect These Zodiac Signs

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்திலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன.

அதுபோல கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அப்படி இடம் பெயர்வதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. அதுபோல சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். அந்த வகையில் இன்று சனியின் பார்வையால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!

இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்

சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை தான்..!

சனி பகவானின் பார்வைக்கு என்றுமே சக்தி அதிகம். அதனால் அவரது பார்வை பட்டாலே ஏதாவது பிரச்சினை வரும் என்று சொல்வார்கள். அதுபோல சனியின் மூன்றாம் பார்வை சில ராசிக்காரர்களுக்கு சிரமத்தை கொடுக்க போகிறது. அதனால் இந்த நேரத்தில் கவனமாக இருக்கவேண்டிய ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

மகர ராசி:

மகர ராசி

சனி பகவானின் பார்வையால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக காணப்படும். தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரும். பணவரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். அதை சமாளிக்க மிகவும் சிரமப்படுவீர்கள்.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இதுல உங்க ராசி இருக்கா 

மீன ராசி:

மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வையால் சில பிரச்சனைகள் ஏற்படப் போகிறது. எதை செய்தாலும் அதை கவனமாக செய்ய வேண்டும். இந்த காலத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும். பல சவால்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் இந்த பார்வை பல சவால்களை சந்திக்க வைக்க போகிறது. இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன்கள்  கிடைக்கும் வாய்ப்பு இல்லை. பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதுபோல செலவுகளும் அதிகமாக காணப்படும்.

தீபாவளி வரை இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறதா.. 

துலாம் ராசி:

துலாம் ராசி

சனியின் பார்வையால் துலாம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலை செய்யும் சக பணியாளர்களுடன் சில சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க மிகவும் சிரமப்படுவீர்கள். உங்கள் கையில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும். தேவையில்லாத செலவுகள் வந்து சேரும்.

கன்னி ராசி:

கன்னி ராசி

சனியில் மூன்றாம் பார்வையால் உங்கள் வேலையில் அலசியம் அதிகமாக காணப்படும். அதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் கெட்ட பெயரை வாங்குவீர்கள். தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில ஏற்ற தாழ்வுகள் காணப்படும்.

Advertisement