மீன ராசியில் சனி அஸ்தமனம்
ஆன்மிகத்தில் சனி பகவான் முக்கியமான கடவுளாக இருக்கிறார். இவரின் பெயர்ச்சி ஆனது நல்லதையும் ஏற்படுத்தும், தீயவற்றையும் ஏற்படுத்தும். என்ன தான் இருந்தாலும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி கொண்டாலும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரது நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றத்தின் பலன்கள் ஆனது 12 ராசிகளுக்கும் இருந்தாலும் கூட சில ராசிகளுக்கு மட்டும் நல்லதாகவும், கெட்டதாகவும் அமைகிறது. அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மார்ச் 29-ம் தேதியிலிருந்து சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அஸ்தமன நிலையில் இருக்க போகிறார். ஏப்ரல் 6-ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
கடகம்:
கடக ராசியில் 9-வது வீட்டில் சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை காண்பார்கள். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். ஆன்மிகத்தில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிக தொடர்பானவற்றிற்கு செலவுகள் செய்வீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் இதுவரை எதிலையாவது முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து லாபம் கிடைக்கும். நீங்க புதிதாக செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் செய்யுங்கள். உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உங்களின் குழந்தைகள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் கனவு நிறைவேறும். மேலும் இந்த ராசியில் படிக்க கூடிய குழந்தைகள் நன்மதிப்பை பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் 10-வது வீட்டில் சனி பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியில் உள்ளவர்கள் யாரும் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். உங்களின் இலக்குகளை அடைவதற்கு இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் எல்லா செயல்களுக்கும் உங்களது துணைக்கு மற்றும் உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் புதிதாக வீடு வாங்க வேண்டும் அல்ல கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த காலம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வாழ்கை ஆனது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
மேஷம்:
சனி பகவான் மேஷ ராசியில் 12-வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் நீங்கள் இதுவரை இருந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். யாராவது வெளிநாடு செல வேண்டும் என்று நினைத்தால் அதற்கான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பண வரவானது அதிகமாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் அப்பாவிடம் எதாவது பிரச்சனை இருந்து பேசாமல் இருந்தால் இந்த நேரத்தில் அந்த பிரச்சனை தீர்ந்து அப்பாவிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். இந்த சனி பகவானின் பெயர்ச்சி ஆனது கஷ்டம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |