Saturn Transit in Pisces 2025 These Zodiac Signs will Get Negative Situation in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு 2025 நடக்கும் சனி பெயர்ச்சியினால் கஷ்ட காலத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஜோதிடத்தின்படி, சனி பெயர்ச்சி மிக பெரிய பெயர்ச்சியாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சியை கண்டு பயம் கொள்ளாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு சனி பெயர்ச்சி பல பாதிப்புகளை உண்டாக்கும்.
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரும்போது அதன் விளைவு 12 ராசிகளில் இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிக பாதிப்பினை ஏற்ப்படுத்தக்கூடும். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்த ஆண்டு சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் அதிக பிரச்சனையை எந்த ராசிக்காரர்கள் சந்திக்க போகிறார்கள் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
2025 -ல் சனி பெயர்ச்சியினால் கஷ்ட காலத்தை சந்திக்க போகும் ராசிகள்:
சனி பகவான் ஏழரை சனி காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவார். சனி பகவான் சஞ்சரிக்க கூடிய ராசிக்கும், அதற்கு முன் மற்றும் அதற்கு பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும். அந்த வகையில் தற்போது மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் மீன ராசிக்கு முன் உள்ள ராசியான கும்ப ராசிக்கும், அதற்க்கு பின் உள்ள மேஷ ராசிக்கும் ஏழரை சனி நடக்கும். அதேபோல், அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடியவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீன ராசி:
சனி பகவான், மீன ராசிக்கு ஜென்ம சனியாக அமர்கிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குஅனைத்து விசயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தொழில் மற்றும் வேலையில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படும். தடைகள் உண்டாகும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் திருப்தி இருக்காது. எனவே, இந்த இரண்டரை ஆண்டுகள் நீங்கள் சில சவாலான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்.
மேஷ ராசி:
சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி நடக்க உள்ளது. இதனால் நீங்கள் மனகவலைகளையும், நிதி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்காத அளவிற்கு நீங்கள் உங்கள் பணத்தை சொத்து வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல் போன்றவற்றில் பயன்படுத்துங்கள். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் ஆத்திக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்கு, சனி பெயர்ச்சி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கும்ப ராசிக்கு சனியின் கடைசி பகுதியான பாத சனி நடைபெற போகிறது. இக்காலத்தில் நீங்கள் வண்டி, வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற பயணங்களை குறைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக காலில் அடிபட வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் தடைகளும் தாமதங்களும் உண்டாகும்.
சிம்ம ராசி:
சனி பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடைபெற போகிறது. சிம்ம ராசியின் 8 -வது வீடான அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பாதகமான விளைவுகள் உண்டாகும். குறிப்பாக புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதியின்மை மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். பணியிடத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுப்படுவீர்கள். எனவே, இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |