இருமுடி பையின் ரகசியம் இது தானா?

Advertisement

Irumudi Paiyin Ragasiyam!!!

இந்த மாதங்களானது (கார்த்திகை- மார்கழி ) ஐயப்ப பக்கதர்களுக்கான மாதம் ஆகும். ஏனென்றால் சித்திரை மாதத்தை விட இந்த மாதங்களில் தான் பெரிதளவு மக்கள் ஐய்யப்பனுக்காக விரதம் இருந்து , மாலை அணிந்து மலைக்கு செல்வார்கள். அவர்கள் செல்லும்போது கூடவே இருமுடிக்கட்டி செல்வார்கள். எதற்காக அப்படி முடிக்கட்டி செல்கிறார்கள், அந்த இருமுடியில் என்ன இருக்கின்றது இதுபோன்ற கேள்விகள் அனைவரது மனதிலும் தோன்றும்.

ஐய்யப்ப சுவாமியோட கதை அனைவர்க்கும் தெரிந்திருக்கும், அவர் எதற்காக மலைக்கு சென்றார் என்றால், தன்னுடைய அம்மாவின் தலைவலியை போக்க புலிப்பால் எடுக்க காட்டிற்குச்செல்வர். அவர் செல்லும் போது ஒரு இருமுடி பையை உடன் எடுத்துக்கொண்டு செல்வார். அந்த இருமுடி பையில் முக்கண் கொண்ட தேங்காய் மற்றும் சில உணவு பொருட்களையும் உடன் எடுத்துக்கொண்டு செல்வார்.

ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா பாடல் வரிகள்

எதற்காக அந்த தேங்காய் மற்றும் அந்த பொருட்களை எடுத்துச்செல்வதன் நோக்கம் மற்றும் இருமுடி பையின் ரகசியத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இருமுடி பையில் இருக்கும் பொருட்கள்:

கீழே இருக்கும் சில பொருட்கள் இருமுடி பையில்இருப்பன. ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இந்த பொருட்களை அனைவரும் எடுத்து செல்கின்றனர், அது என்னவென்று முழுவதுமாக இங்கே பார்ப்போம். முக்கண்கொண்ட தேங்காவில் நெய்ஊற்றி அதனுடன் கீழே உள்ள பொருட்களையும் உடன் எடுத்து செல்வார்.

  • மஞ்சள் பொடி
  • பன்னீர்
  • தேன்
  • சந்தன வில்லைகள்
  • குங்குமம்
  • விபூதி
  • ஊது பத்தி
  • சாம்பிராணி
  • கற்பூரம்
  • பேரீச்சம்பழம்
  • உலர்ந்த திராட்சை
  • முந்திரி
  • கல்கண்டு
  • அச்சு வெல்லம்
  • அவல்
  • பொரி
  • கடலை
  • மிளகு
  • கல் உப்பு
  • எலுமிச்சம் பழம்
  • வெற்றிலை பாக்கு
  • பாசிப்பருப்பு
  • வளையல்
  • தேங்காய் 
  • கண்ணாடி
  • சீப்பு
  • ரவிக்கை துணி

ஐயப்பன் சிவன் மற்றும் விஷ்ணுவின் (மோஹினி அவதாரத்தின்) ஐக்கியத்தில் பிறந்தவர். அந்த இருமுடி பையில் உள்ள முக்கண் கொண்ட தேங்காய் சிவனை குறிக்கும். மகாலட்சுமி திருமாலின் இதயத்தில் உறைந்திருப்பவர். அதனால்தான் தேங்காயில் நெய்யை ஊற்றுகின்றனர்.

ஐய்யப்பனின் தாய் விஷ்ணுவின் மோஹினி அவதாரம் அது நெய்யை குறிக்கிறது, தேங்காய் சிவனை குறிக்கின்றது. இதனால்தான் சபரிமலை செல்லும் பக்தர்களது இருமுடிபையில், தேங்காய் இருக்கிறது.

ஐயப்ப சுவாமிக்கு இதனால்தான் நெய் அபிஷேகம் மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement