வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செகமாயை திருப்புகழ் பாடல் வரிகள்

Updated On: March 27, 2025 3:54 PM
Follow Us:
segamayai thirupugal lyrics in tamil
---Advertisement---
Advertisement

செகமாயை திருப்புகழ் | செகமாயை திருப்புகழ் Lyrics

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவார்கள். அதில் பெரும்பாலனவர்களுக்கு பிடித்த கடவுளாக முருகன் இருக்கிறார். இவருக்கு உரிய மந்திரங்கள்,ஸ்லோகங்கள் போன்றவற்றை சொல்லி வழிபடுவதால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். இந்த பதிவில் செகமாயை திருப்புகழ் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

செகமாயை திருப்புகழ் பாடல் வரிகள்  | Jagamayai Lyrics in Tamil

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.

எதிரிகளை அழிக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்

எப்படி இந்த பாடலை வாசிப்பது:

செகமாயை யுற்று
என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி
தெசமாத முற்றி
வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த
பொருளாகி
மக அவாவின்
உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர்புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி
நித்த மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாது எனக்கு
உன் அடிகாண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே.

பாடல் விளக்கம்:

செகமாயை யுற்று- இந்த உலக மாயையில் சிக்குண்டு,

என் அகவாழ்வில் வைத்த- எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய

திருமாது கெர்ப்பம் உடல் ஊறி- அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறிபத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,

தெசமாத முற்றி- நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய

வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்தபொருளாகி – குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,

மக அவாவின்-குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை

உச்சி விழி ஆநநத்தில் -உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,

மலைநேர்புயத்தில் உறவாடி-எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,

மடிமீதடுத்து விளையாடி -என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நித்த மணிவாயின் முத்தி தரவேணும் -நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு-முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்

முலைமேல் அணைக்க வருநீதா -மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே

முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் – பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

மொழியேயு ரைத்த குருநாதா- பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,

தகையாது எனக்கு-தடையொன்றும் இல்லாது எனக்கு

உன் அடிகாண வைத்த … உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த

தனியேரகத்தின் முருகோனே … ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில் … மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே

சமர்வேலெடுத்த பெருமாளே. … போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.

முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now