செல்வம் செழிக்க செய்ய வேண்டியது
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆசை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தான் பணத்தை சம்பாதிக்கிறோம். இந்த பணமானது அன்றைய நாள் செலவுக்கே சரியாக இருந்தால் என்னடா வாழ்க்கை என்று யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் பணத்தை சம்பாதித்து கொண்டே இருக்கமுடியாது . நாம் இப்பொழுது சம்பாதிக்கின்ற பணமானது இரட்டிப்பு ஆக வேண்டும் என்று தான் நினைப்போம். அதனால் தான் இந்த பதிவில் ஆன்மிகத்தில் வழியை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
செல்வம் செழிக்க அரிசி பானையில் வைக்க வேண்டியது:
இந்த பரிகாரத்தை நீங்கள் பௌணர்மி அன்று தான் செய்ய வேண்டும்.
பரிகாரத்தை செய்வதற்கு முதலில் மஞ்சள் துணி கர்சீப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.
அதில் 2 கிராம்பு, 2 ஏலக்காய், 2 விரலி மஞ்சள், 2 ரூபாய் காயின், 2 பட்டை எடுத்து கொள்ளவும். அதிலேயே 2 பிரியாணி இலையை எடுத்து அதில் எனக்கு செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எழுதி கொள்ளவும்.
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மஞ்சள் துணியில் வைத்து கட்டி கொள்ளவும்.
இதனை பௌணர்மி நிலவு படுவது போல் வெளியில் வைக்க வேண்டும். அன்றைய நாள் இரவு முழுவதும் வெளியிலியே இருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அரிசி பானையில் வைத்து விட வேண்டும். இந்த பொருட்களை வைத்து நாம் பயன்படுத்தும் போது வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்
முக்கியமாக அரிசி பானையை கிட்சனில் இருக்க கூடாது. வேறு ஏதேனும் ரூமில் வைத்து விட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்து முடித்த பிறகு அடுத்த பௌணர்மி மாதம் மாதம் மாற்றலாம். அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.
இதில் உள்ள பொருட்களை காலடி படாத இடத்தில் அதாவது ஆற்றில் தூக்கி போட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிப்பதை நீங்களே காண்பீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |