போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!

Advertisement

Selvam Athikarikka Astrological Tips in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகள் இருக்கும். அவ்வாறு நமது மனதில் உள்ள பலவகையான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம் தான். அதிலும் இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது சேர்ந்தாலும் சீக்கிரத்தில் செலவாகி விடுகின்றது என்று கவலைப்படுபவரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் எளிமையான முறையில் பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை செய்து உங்கள் வீட்டின் பணவரவையும் அதிகப்படுத்தி பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகுது

வீட்டில் செல்வம் சேர பரிகாரம்:

Aadi 18 pariharam in tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படும் மற்றும் அனைத்திற்கும் மூலதனமாக உள்ள பணம் நம்மிடம் அதிக அளவு சேருவதற்குப் உதவும் பரிகாரம்.

  1. கண்ணாடி டம்ளர் – 1
  2. பன்னீர் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. பச்சை கற்பூரம் – 1
  4. கிராம்பு – 3
  5. ஏலக்காய் – 3
  6. கல் உப்பு – சிறிதளவு 
  7. இலவங்கப்பட்டை – 1
  8. 1 ரூபாய் நாணயம் – 1
  9. தண்ணீர் – தேவையான அளவு 

நவம்பர் 4-ல் ஏற்படும் சனியின் வக்ர நிவர்த்தியால் பம்பர் பலன்களை அடைய போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி டம்ளரில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் பன்னீர், 1 பச்சை கற்பூரம், 3 கிராம்பு, 3 ஏலக்காய் , சிறிதளவு கல் உப்பு, 1 இலவங்கப்பட்டை மற்றும் ஒரு 1 ரூபாய் நாணயம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

இதனை உங்களின் பூஜை அறையில் வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யுங்கள். அதன் பிறகு அடுத்த இதில் உள்ள கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை எடுத்து மற்றவர்கள் கால் பாடாத இடத்திற்கு தூக்கி போட்டுவிடுங்கள்.

1 ரூபாய் நாணயத்தை எடுத்து நீங்கள் பணம் வைக்கின்ற இடத்தில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் உள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:

Panam peruga in tamil

இந்த பரிகாரத்தை ஆடி பெருக்கு அன்று காலை 04.00 மணி முதல் 05.00 மணிக்குள் செய்து அன்றைய நாள் முழுவதும் இது பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் மேலே கூறியது போல் செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் ஆடி பெருக்கன்று இந்த பரிகாரத்தை செய்ய முடியாமல் போகிவிட்டது என்றால் செய்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் செய்து கொள்ளுங்கள்.

கடன் தொல்லை தங்க முடியலையா அப்போ இதை மட்டும் ஒரு முறை செய்யுங்க போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement