வீட்டில் வைக்கக் கூடாத பொருட்கள்
நம் வீட்டில் வைக்கும் பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி வைப்போம். ஆனால் சில பொருட்கள் வைக்க கூடாது என்று தெரியும். ஆஞ்சிநேயர் படம், சிவன் படம், முருகன் படம் போன்ற சாமி படங்கள் வீட்டில் வைக்க கூடாது என்று தெரியும். ஆனால் சில பொருட்களையும் வீட்டில் வைக்க கூடாதாம். மீறி வைத்தால் வீட்டில் கஷ்டம் மேலே கஷ்டம் வந்துகொண்டே இருக்கும். அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ உங்களுக்கு கஷ்டம் வராமல் இருக்க இந்த பொருட்களை தானமாக கொடுக்காதீர்கள்
துடைப்பம்:
நாம் வீட்டில் பயன்படுத்தும் துடைப்பம் தோகையாக இருக்க வேண்டும். தேய்ந்த துடைப்பத்தை பயன்படுத்த கூடாது. துடைப்பத்தை மகாலட்சுமியோடு ஒப்பிடப்படுகிறது. வீட்டில் தேய்ந்த துடைப்பத்தை பயன்படுத்தினால் பணம் பற்றாக்குறையும் அந்த அளவுக்கு ஏற்படும். துடைப்பத்தை செங்குத்தாக நிறுத்தி வைக்க கூடாது. வீட்டின் மேல் அல்லது பரணி மேலேயும் போட்டு வைக்க கூடாது. இப்படி செய்தால் வீட்டில் பணம் கஷ்டம் ஏற்படும். துன்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.
உடைந்த கண்ணாடி வீட்டில் வைக்கலாமா.?
முகத்தை பயன்படுத்த கூடிய கண்ணாடி அழகாக இருக்க வேண்டும். கண்ணாடி கீரியோ, உடைந்தோ வீட்டில் இருக்க கூடாது. அதை பயன்படுத்தவும் கூடாது. உடைந்த அழகு சாதன பொருட்களான வளையல்களையும் பயன்படுத்த கூடாது. உடைந்த வளையல்கள் வீட்டில் இருக்கவும் கூடாது.
ஓடாத கடிகாரம்:
வீட்டில் கடிகாரம் முள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கடிகாரம் ஓடவில்லை என்றால் உடனே கடிகாரத்தை கீழே எடுத்து வைக்க வேண்டும். ஓடாத கடிகாரத்தை சுவரிலே மாட்டி வைக்காதீர்கள். அப்படி வைத்தால் கடன் பிரச்சனை ஏற்படும்.
உயிர் இல்லாத செடிகள்:
நீங்கள் புதிதாக ஒரு செடி வாங்கி வைக்கிறீர்கள். அந்த செடி சிறிது நாள் கழித்து காய்ந்து விடுகிறது. அந்த செடியை நீங்கள் அப்படியே வைக்க கூடாது. அந்த செடியை உடனே பிடிங்கிட வேண்டும். இந்த செடியை அப்படியே விட்டால் வீட்டில் கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதனால் தேவையில்லாத செடிகளை அகற்றி விடுங்கள்.
வீட்டில் செருப்பு வைக்கும் இடம்:
நாம் பயன்படுத்தும் செருப்புகளை வீட்டில் உள்பக்கத்திற்கு எடுத்து வர கூடாது. திண்ணை அல்லது அதற்கென்று ஒரு stand இந்த மாதிரி தான் வைக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தாத செருப்புகளையும் வைக்க கூடாது. அறுந்து போன செருப்புகள் வீட்டில் இருக்க கூடாது. இந்த செருப்புகளை வைத்தால் உங்களை பிரச்சனை துரத்தி கொண்டே இருக்கும்.
கிழிந்த துணியை:
வீட்டில் கிழிந்த துணிகள், உடைந்த பொருட்கள், இரும்பு பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைக்க கூடாது. இந்த பொருட்கள் வீட்டில் வைத்திருந்தால் உடனடியாக வீசுங்கள். இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. தொழிலையும் வளர விடாது. தொழில்களிலும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் வீட்டில் வைத்திருந்தால் உடனே வீட்டை விட்டு அகற்றி விடுங்கள். அப்போது தான் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பண பிரச்சனை ஏற்படாது. கடன் பிரச்சனை இருக்காது. வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |