உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் சம்மந்தம் இருக்கு அதனை எப்படி பயன்படுத்துவது..

Advertisement

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு 

பணத்தை ஓடி ஓடி சம்பாதிக்கின்றோம், அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தால் எங்கே போகிறது என்றே தெரியாமல் போகிவிடுகிறது. பணத்தை மிச்சப்படுத்தணும் என்று நினைத்தால் கூட அதனை மிச்சப்படுத்த முடியவில்லை. வீட்டில் பணம் தங்குவதற்காக ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று தேடுவார்கள். நீங்கள் பணத்தை கொடுத்து செல்வம் சேருவதற்கு பரிகாரம் செய்வதை விட வீட்டில் உள்ள உப்பின் மூலம் செல்வத்தை அதிகரிக்கலாம். அது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உப்பை வாங்க வேண்டும்.

நீங்கள் மாதம் மாதம் மளிகை சாமான்கள் வாங்குவீர்கள், அதில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வங்கியிருப்பீர்கள்,அதில் உப்பை மட்டும் மறந்து விடுவீர்கள். அதனால் இனிமேல்  நீங்கள் வாங்கும் பொருட்களில் முதன்மையாக கல் உப்பை வாங்க வேண்டும். கல் உப்பு ஆனது மகாலட்சுமியின் உருவமாக பார்க்கப்படுவதால் இதனை முதலில் வாங்குவது நல்லது.

வெள்ளிக்கிழமை: 

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு 

சில பேர் உப்பு பாத்திரத்தில் உள்ள உப்பு முழுமையாக தீரும் வரை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்றாகும்.ஏனென்றால் உப்பு ஆனது மகாலட்சுமியின் உருவமாக பார்க்கப்படுகிறது. அதனால் இதனை சுத்தமாக தீரும் வரை பயன்படுத்த கூடாது. உப்பு கொஞ்சமாக இருக்கும் போதே வாங்கி விட வேண்டும். அது போல வெள்ளி கிழமைகளில் உப்பை கீழே கொட்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

தேவியின் அருள்:

காலை அல்லது மாலை நேரத்தில் கடவுளுக்கு பிடித்ததை வைத்து வணங்குவீர்கள், கடவுளுக்கு பிடித்ததை வைத்து வழிபடுவதால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதில் வெள்ளி கிழமைகளில் கல் உப்பு சிறிதளவு எடுத்து கையில் வைத்து கொள்ள வேண்டும், இதனை வைத்து பூஜை அறைக்கு சென்று கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள், இப்படி வணங்குவதால் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும், மேலும் மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும்.

தீய சக்திகள்:

வீட்டை வாரத்திற்கு ஒரு நாள் கழுவி விடுவீர்கள், அப்படி நீங்கள் கழுவும் தண்ணீரில் கல் உப்பை போட்டு கரையும் வரை வெயிட் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டை கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை நீங்கும்.

வீட்டின் செல்வநிலை மேம்பட கல் உப்பு போதுங்க. இந்த பரிகாரத்தை ஒரு செய்து வாழ்நாள் பலன் பெறுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement