Selvam Peruga Pariharam in Tamil
பொதுவாக அனைவருக்குமே தங்களாது வீடு எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் இருக்கும். அதனால் அதனை நிறைவேற்றி கொள்வதற்காக நாமும் கடினமாக உழைப்பும். அப்படி உழைத்தும் இறுதியில் எந்த ஒரு பயனும் இல்லாமல் போகிவிடும். ஏனென்றால் நாம் தேடி தேடி சம்பாதித்த செல்வம் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் செலவாகிவிடும். அதனால் உங்களின் ஆசை நிறைவேறது. அதனால் உங்களின் மனமும் மிகவும் கஷ்டப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பை சிறப்பாக வைத்திருக்க உதவும் ஒரு சில குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டினை என்றும் செல்வ செழிப்புடன் வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்த ஒரு பரிஹாரம் மட்டும் போதும்
வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க:
உங்கள் வீட்டில் என்றும் செல்வம் இருந்து கொண்டே இருப்பதற்கான ஒரு சில குறிப்புகளை இங்கு காணலாம்.
குறிப்பு – 1
இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்கள் என்னெவென்றால் பச்சைக்கற்பூரம், சிறிய துண்டு சிவப்பு நிற துணி, 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் சிறிதளவு விபூதி ஆகியவையே தேவைப்படும்.
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள சிறிய துண்டு சிவப்பு நிற துணியில் பச்சைக்கற்பூரம், 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் சிறிதளவு விபூதி ஆகியவற்றை சேர்த்து ஒரு சிறிய மூட்டையாக கட்டி உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்யுங்கள்.
இதில் உள்ள பொருட்களை மாதம் ஒருமுறை மாற்றி கொள்ளுங்கள்.
சனி வக்ரத்தால் 4 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகின்றது
குறிப்பு – 2
அடுத்த குறிப்பிற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்றால் பச்சைக்கற்பூரம், பன்னீர், மஞ்சள்தூள் மற்றும் ஒரு கண்ணாடி டம்ளர் ஆகியவை தான் தேவைப்படும்.
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சைக்கற்பூரம், பன்னீர் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்கள் வீட்டின் பூஜையே அறையில் வைத்து நன்கு பூஜை செய்த பிறகு உங்கள் வீட்டின் குபேர மூலையில் வையுங்கள்.
அப்படிஇல்லையென்றால் நீங்கள் எங்கு அதிக அளவு பணத்தை வைத்து புழங்குவீர்களோ அங்கு வைத்து கொள்ளுங்கள். இதில் உள்ள பொருட்களை வாரம் ஒருமுறை மாற்றி கொள்ளுங்கள்.
மேலே கூறியுள்ள இரண்டு குறிப்புகளையும் நீங்கள் வெள்ளிக்கிழமையில் செய்வது மிகவும் நல்ல பலனை தரும்.
ஆண்டியையும் அரசனாக்கும் புதஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |