Selvam Peruka Pongal Antru Vanga Vendiya Porutkal
நாம் அனைவருக்கும் தித்திக்கும் திருநாளாக பொங்கல் பண்டிகை வரப்போகிறது. பொங்கல் என்றாலே சொல்ல வேண்டாம் அனைவருடைய மனதிலும் ஒரு புது விதமான கொண்டாட்டம் மற்றும் அதிக அளவில் மகிழ்ச்சியும் காணப்படும். ஏனென்றால் இந்த பொங்கல் பண்டிகை 1 நாட்களில் முடிவடையாமல் 3 நாட்கள் தொடர்ச்சியாக மிகவும் விமர்சனமாக தமிழர்கள் அனைவருடைய வீட்டிலும் வழிபாடும் ஒரு முறையாக இருக்கிறது. இத்தகைய பொங்கல் வந்தால் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த பொங்கலை கொண்டாடுவதற்கு வாழைப்பழம், கரும்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் இதுபோன்ற பொருட்களை நமக்கு தேவையான அளவிற்கு வாங்கி கொள்ளும்.
ஆனால் பொங்கல் அன்று செல்வம் பெருக வாங்க வேண்டிய மூன்று பொருட்கள் இருக்கிறது. அதனால் என்னென்ன பொருட்கள் என்று தெரிந்துக்கொண்டு செல்வம் பெருக நாமும் அந்த பொருட்களை வாங்கலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா
செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்:
பொங்கல் அன்று நீங்கள் மூன்று பொருட்களை வாங்கினால் போதும் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும். அது என்னென்ன பொருட்கள் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல் உப்பு:
பொங்கல் வைக்க நீங்கள் மளிகை பொருட்களை முன்கூட்டியே வாங்கி இருந்தாலும் கூட பொங்கல் அன்று காலையில் எழுந்து குளித்தவுடன் கல் உப்பினை வாங்கி உங்கள் வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் கொட்டி வைத்து விடுங்கள்.
கல் உப்பு மஹாலக்ஷ்மிக்கு உகந்த பொருளாக இருக்கிறது. அதனால் பொங்கல் அன்று கல் உப்பினை வாங்கினால் போதும் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருகி அனைவரும் உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
வெல்லம்:
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதனால் பொங்கல் அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்த விட்டு அதன் பின்பு கடையில் வெல்லம் அல்லது சர்க்கரை இரண்டில் எதாவது ஒன்றை வாங்கி பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு அதன் பிறகு நீங்கள் பொங்கல் வைக்க ஆரம்பிக்கலாம்.
நீங்கள் வேண்டும் என்றால் பூஜை அறையில் வைத்த வெல்லத்தினை சாமி கும்பிட்ட பிறகு பொங்கல் வைக்க உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
இதை மட்டும் செய்தால் போதும் நீண்ட நாளாக இருந்த கடன் பிரச்சனை அனைத்தும் விரைவில் நீங்கி உங்கள் வீடு செல்வ செழிப்புடன் இருக்கும் என்று சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது.
அரிசி:
பொதுவாக துவரம் பருப்பு லக்ஷ்மி கடாச்சமான ஒரு பொருளாக இருக்கிறது. இதனை நீங்கள் பொங்கல் அன்று காலையில் வாங்கி குளித்து விட்டு அதன் பிறகு ஒரு தாம்பூலம் தட்டில் அரிசியினை கொட்டி அதன் மேல் பணம் வைத்து விளக்கு ஏற்றி வழிபாட்டால் உங்கள் வீட்டில் அதிகமாக பணம் பெருக வழிவகுக்கும்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது போல பொங்கல் அன்று காலையில் மறக்காமல் இந்த மூன்று பொருட்களை வாங்கி வழிபட்டால் போதும் உங்கள் வீடு செல்வ செழிப்புடன் காணப்படும்.
கோமியம்:
கடைசியாக பொங்கல் அன்று காலையில் மாட்டு கோமியத்தை வாங்கிக்கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து மா இலை வைத்து வீடு முழுவதும் அந்த கோமியத்தை தெளித்தால் போதும் வீட்டின் மீது பட்ட எதிர்மறை எண்ணகங்கள் அனைத்தும் நீங்கி உங்களுடைய வீட்டில் பணம் பெருக ஆரம்பமாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |