வேண்டிய வரம் தரும் விசாகம்

Advertisement

வேண்டிய வரம் தரும் விசாகம்

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக இருக்கிறது. ஆடி, ஆவணி மாதம் அம்மனுக்கு உரியதாக இருக்கிறது.வைகாசி மாதம் முருகனுக்கு உரியதாக இருக்கிறது. முருக பெருமானை பலருக்கும் பிடித்த கடவுளாக இருக்கிறார்கள். இந்த கடவுளுக்காக பலரும் விரதம் இருப்பார்கள். சஷ்டி விரதம் இருந்தால் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை வைகாசி விசாகம் வருகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரத்தை கொடுப்பார். இதனை பற்றிய முழு விவரங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 முருகன் பிறந்த நாள்:

வேண்டிய வரம் தரும் விசாகம்

வைகாசி விசாக திருநாள் ஆனது முருகப்பெருமான் இந்த உலகிற்கு வந்ததாக கூறப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும், பகை விலகும். துன்பம் நீங்கும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

வெற்றி:

முருகப்பெருமானுக்கு உரிய நாள் எத்தனை இருந்தாலும் வைகாசி விசாகம் என்பது புகழ்பெற்றதாக இருக்கிறது. அதனால் இந்த நாளன்று நீங்கள் முருக பெருமான் சன்னதிக்கு சென்று மனமுருக வேண்டி கொண்டால் நீங்கள் கேட்டதை கொடுப்பார்.

செல்வம் அதிகரிக்கும்:

வைகாசி விசாகம் அன்று நீங்கள் முருக சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் முருக பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களால் முருக பெருமான் சன்னதிக்கு செல்ல முடியாது என்றால் வீட்டிலையே முருக படத்தை வைத்து தரிசிக்கலாம். மேலும்  முருகனுக்குரிய மந்திரமான ஓம் சரவணபவ, நம ஓம் முருகா என்ற இரு மந்திரத்தில் ஏதவாது ஒரு மந்திரத்தை கூறலாம்.

முருகன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் கேட்ட வரத்தை கொடுப்பார்கள்.

தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்:

வைகாசி விசாகம் அன்று குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் போன்ற பொருட்களை தானம் கொடுக்கலாம். இப்படி நீங்கள் தானம் கொடுப்பதால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். மேலும் செல்வம் அதிகரிக்கும்.

வைகாசி விரதம் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி

Vaikasi Visakam 2024 Viratham in Tamil

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement