வீட்டில் செம்பருத்தி செடி வளர்ப்பவர்களா நீங்கள் இந்த பதிவு உங்களுக்கு தான்..!

veetil valarkum sedigal in tamil

வீட்டில் செம்பருத்தி செடியை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது ஒரு சிறந்த ஆன்மிக தகவல் பற்றித்தான். அது என்னவென்றால் வீட்டில் செம்பருத்தி செடியை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும், அதனை எந்த திசையில் வளர்த்தால் வீட்டிற்கு செல்வம் வரும் என்பதை பற்றியும் தான் பார்க்கப்போகின்றோம். இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம். 

இதையும் பாருங்கள் => வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

வீட்டில் செம்பருத்தி செடியை எந்த திசையில் வளர்த்தால் செல்வம் பெருகும்:

sembaruthi sedi valarkum thisai

நாம் அனைவரின் இல்லத்திற்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடிவருவதற்கு சில செடிகளை வளர்ப்பது நல்லது என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள். அப்படி நமது இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய தாவர வகைகளில் இந்த செம்பருத்தி செடியும் ஒன்று .

அப்படிப்பட்ட இந்த செம்பருத்தி செடியை வீட்டின் எந்த திசையில் வளர்ப்பது நல்லது என்று பார்க்கலாம். பொதுவாக தனி வீடு என்பதில் முன்வாசல் மற்றும் பின்வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கும். அப்படி இல்லாமல் முன்வாசல் மட்டும்தான் இருக்கின்ற வீடுகளும் உள்ளது. உதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள்.

அதுபோல் இல்லாமல் நமது வீடுகளில் முன்வாசல் மற்றும் பின்வாசல் என்று இரண்டு வாசல்களும் உள்ளது என்றால் வீட்டின் முன்வாசலில் வளர்க்கவேண்டிய முக்கியமான செடிகளில் செம்பருத்தி செடியும் ஒன்று ஆகும்.

தெய்வீக சக்தி பொருந்திய இந்த செம்பருத்தி செடியை நமது வீடுகளின் முன்வாசலில் வளர்ப்பதினால் நமது இல்லத்தை தேடிவருகின்ற பிரச்சனைகள், கண்திருஷ்டி போன்றவற்றை தடுத்துவிடும்.

வீட்டின் முன்வாசலில் இந்த செம்பருத்தி செடியை வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதினால் அதில் பூக்கின்ற பூக்கள் நமது இல்லத்தை தேடிவருகின்ற எதிர்மறை அதிர்வுகளை தடுத்து நமது இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை தரும்.

அப்படி வீட்டின் முன்வாசலில் இந்த செம்பருத்தி செடியை வைத்து வளர்ப்பதுடன் ஏதாவது முட்கள் நிறைந்த செடிகளை வளர்ப்பதும்  மிகவும் நன்மையைத் தரும். உதாரணமாக செம்பருத்தி செடியுடன் மஞ்சள் ரோஜா பூச்செடியை வளர்ப்பது கூட நன்மையைத் தரவல்லது.

இந்த செம்பருத்தி செடியை வீட்டின் முன்வாசலில் வைத்து வளர்ப்பது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட திசைகளில் வைத்துகூட இந்த செம்பருத்தி செடியை வளர்ப்பது என்பது நன்மையை தரும். அப்படி எந்த திசைகளில் வளர்க்கலாம் என்றால் மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் வளர்ப்பது நன்மையை தரும்.

வீட்டில் வளர்க்கக்கூடிய செம்பருத்தி செடியில் எந்த அளவுக்கு பூக்கள் பூத்துக்குலுங்குதோ அந்த அளவுக்கு நமது இல்லத்தில் சந்தோஷங்களும், அதிர்ஷ்டமும் நிறைந்து காணப்படும்.

அப்படி இந்த செம்பருத்தி செடியில் உள்ள மலர்களை பறித்து நாம் கடவுள்  வழிபாட்டிற்கு பயன்படுத்துவதாலும் நமது இல்லத்தில் சந்தோஷமும், அதிர்ஷ்டமும் நிறைந்து காணப்படும்.

மேலும் இந்த செம்பருத்தி செடி மிகவும் மருத்துவகுணம் உடையது குறிப்பாக இதன் இலைகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் இதன் பூக்கள்  இதய சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆற்றல் உள்ளது.

sembaruthi payangal in tamil

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மேலே கூறிய அனைத்து நன்மைகளும் ஒற்றை அடுக்கு செம்பருத்தி பூக்களை கொண்ட செடிக்கு மட்டும்தான் மேலும் அந்த பூக்கள் சிவப்பு நிறப்பூக்களாக இருக்கவேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்