செருப்பு தொலைந்து போனால் என்ன பலன்?
Seruppu Tholainthal Enna Palan – நம்மில் பலருக்கு வெளியிடங்களுக்கு சென்று வரும் போது செருப்பை தொலைத்திருப்போம். அதிலும் குறிப்பாக கோவில்களுக்கு சென்று வரும் போது தான் கண்டிப்பாக அந்த சம்பவமும் நடந்திருக்கும். இந்த செருப்பு தொலைந்துபோவது நல்ல விஷயமா, அல்லது கெட்ட விஷயமா? செருப்பு தொலைந்து போனால் என்ன நடக்கும் என்று நிறைய குழப்பங்கள் இருக்கும். அதிலும் பலருக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால் நாம் அணியும் செருப்பிற்கும், ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு? என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதுகுறித்து இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
செருப்பு பற்றி ஆன்மிக தகவல்:
நாம் அணிந்துகொள்ளும் செருப்பு, ஷூ அனைத்தும் சனி பகவானுடைய காரகத்துவம் கொண்ட அம்சங்களாகும். எனவே இவற்றை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளும், பயன்படுத்தும் முறைகளும் கூட நம்முடைய தடைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது என்கிறது ஜோதிடம். அப்படி நாம் அணியும் செருப்பு எந்த வகையில் நமக்குத் தடையாக இருக்கும்? என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ராசிக்காரர்கள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது.. இதில் உங்க ராசி இருக்கா..
செருப்பு காணாமல் போனால் என்ன பலன்? | Seruppu Tholainthal Enna Palan
கோவிலில் செருப்பு தொலைந்தால் மிகவும் நல்லது தான். செருப்பு காணாமல் போனால் உங்கள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
செருப்பு காணாமல் போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் சில தகவல்கள்:
நீங்கள் போட்டுக்கொள்ளும் செருப்பு, பிய்ந்த செருப்பு அல்லது அழுக்குடன் இருக்கும் செருப்பாக அணிந்தால் வெற்றியில் நிறையத் தடைகளும் ஏற்படும்.
செருப்பு, ஷூ போன்றவை உங்களுக்கு அணியும் பொழுது கச்சிதமாக இல்லாமல் இருந்தால் எதிலும் முன்னேற்றம் என்பது இருக்காது. தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ஒருவர் செருப்பை சரியான சைசில் அணிந்துகொள்ளாமல் இருந்தால்! நிச்சயமாக, அவர்களுடைய வருமானம் தடைபடும். நீங்கள் அணியும் செருப்பு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உங்களுடைய சரியான அளவிற்கு இல்லாமல் தவறாக அமைந்து விட்டால் அதனை நீங்கள் பயன்படுத்தவே கூடாது. வாங்கி விட்டோம் என்பதற்காக அந்த செருப்பைப் பயன்படுத்தினால் வருமான ரீதியான தடை ஏற்படும் என்கிறது ஜோதிடம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாலை 6 மணிக்கு மேல் இந்த தவறை செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |