சேவல் கனவில் வந்தால் | Seval Kanavu Palangal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சேவல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம் அனைவருக்கும் பல விதமான கனவுகள் வரும். அந்த கனவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன்கள் இருக்கும். ஆனால், அந்த கனவுகளுக்கான அர்த்தங்கள் பற்றி நமக்கு தெரியாது. அதனால் நமக்கு வரும் கனவுகளுக்கான அர்த்தங்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு வரும் கனவுகளுக்கான அர்த்தங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் நம் பொதுநலம் இணையதளத்தை பார்வையிடவும்.
இன்றைய பொதுநலம் பதிவில் சேவல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை கொடுத்துள்ளோம். எனவே, உங்கள் கனவில் சேவல் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சேவல் கனவில் வந்தால் என்ன பலன்:
பொதுவான பலன்கள்:
சேவல் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வரப்போவதை உணர்த்துகிறது. மேலும், உங்கள் தொழில், பணி அல்லது உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
இரண்டு சேவல்கள் சண்டையிடுவது போல் கனவு கண்டால்:
இரண்டு சேவல்கள் சண்டையிடுவது போல் கனவு வந்தால், மேலதிகாரியிடம் வீண் விவாதங்கள், விரும்பதகாத சூழ்நிலை உண்டாகும் என்பதை குறிக்கிறது. மேலும், நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும் என்று அர்த்தம்.
சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது?
Seval Kothuvathu Pol Kanavu Vanthal:
சேவல் கூவுவதுபோல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கி உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாற போகிறது என்பதை குறிக்கிறது.
சேவல் நடப்பது போல் கனவு வந்தால்:
சேவல் உங்கள் வீட்டு பகுதியில் நடபப்து உலாவுவது போல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு திட்டத்தை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும், உங்கள் இல்லத்தில் சுப காரியம் நிகழ இருப்பதையும் குறிக்கிறது.
சேவல் வீட்டிற்குள் வருவது போல் கனவு வந்தால்:
எங்கிருந்தோ ஒரு சேவல் வந்து, உங்கள் வீட்டிற்கு உள்ளே ஒளிந்து கொண்டால் உங்களுக்கு ஒரு யோகம் வர போகிறது என்று அர்த்தம். பணவரவு வரக்கூடும் என்பதையும் குறிக்கிறது.
சேவல் இறந்து போவது போல் கனவு கண்டால்:
சேவல் இறந்து போவது போல் கனவு வந்தால் நீங்கள் செய்யும் செயல்களில்/முயற்சிகளில் பொருள் இழப்பு ஏற்படும் என்பதை குறிக்கிறது.
சேவலை பலியிடுவது போல் கனவு கண்டால்:
சேவலை பலியிடுவது போல் கனவு வந்தால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |