Sevvai Kilamai Aan Kulanthai Piranthal
பிள்ளை பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது மூலம் அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.
அது போல ஆன்மிகத்தில் தங்களின் ஒருவரின் குணங்களை பல முறைகளில் கூறலாம். அதனை பற்றி நம்முடைய பதிவில் நிறைய வகைகளில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
ஆளுமை பண்புகள்:
செவ்வாய் கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
எந்த செயலையும் முழு நம்பிக்கையுடன் செய்ய கூறியவர்களாக இருப்பார்கள்.இதனால் அவர்கள் செயயும் செயல்களில் வெற்றியை காண கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பார்கள். இவர்களின் செயல்களில் மற்றவர்களின் உதவி எதிர்பார்க்க மாட்டார்கள். யாரோ ஒருவர் இந்த வேலையை செய்யாதே ரிஸ்க் என்று கூறினாலும் அதனை தைரியமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டிய ஆற்வம் இவர்களிடம் அதிகமாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள்.
காதல் வாழ்க்கை:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள். எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய அன்பின் மூலம் ஜெயித்து விடுவார்கள்.
ஆரோக்கியம்:
செவ்வாய் கிழமை பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்
தொழில்:
இந்த கிழமையில் ஆண் குழந்தைகள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள். இவர்களிடம் ,கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்லது விளையாட்டு துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்.
அவர்கள் எழுத்து, இசை, கலை அல்லது சுய வெளிப்பாட்டின் பிற வடிவங்களில் திறமை பெற்றிருக்கலாம்.
பலவீனம்:
இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களை அவசரமாக செய்து விட்டு அதன் பிறகு அதனை பற்றி சிந்திப்பார்கள். இவர்களிடம் கோபம் குணமானது அதிகமாக காணப்படும். இதனால் நிறைய உறவுகளை இழக்க நேரிடும். வெளிப்படையாக மனதில் உள்ள விஷயத்தை மற்றவர்களிடம் பேசுபவர்களாக இருப்பார்கள். இதனால் நிறைய நபர்களிடம் மோதல்கள் ஏற்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |