செவ்வாய்க்கு சாதகமான ராசி நட்சத்திரம்
ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. இது ஆற்றல், வீரியம், தைரியம், போட்டி மனப்பான்மை, உணர்ச்சி மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. செவ்வாய் எந்த ராசியில் அல்லது நட்சத்திரத்தில் அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து, அது சாதகமான பலன்களையும், சில நேரங்களில் சவால்களையும் தரக்கூடும். இந்த பதிவில், செவ்வாய் கிரகத்துக்கு மிகவும் சாதகமான ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
செவ்வாய்க்கு சாதகமான ராசிகள்:
மேஷம்:
செவ்வாயின் சொந்த ராசியாக மேஷம் இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் தன்னம்பிக்கை, தைரியம், போராட்ட ஆற்றல் மற்றும் வெற்றி அடையும் திறன் போன்றவை அதிகரிக்கும். இருவருக்கிடையே உறவானது ரொம்ப வலுவாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ஒரு நீர்த் தன்மையுள்ள ராசி இதனால் செவ்வாய் இங்கு இருந்தால் மனதில் தைரியம், ரகசிய நுணுக்கங்கள், ஆராய்ச்சி மற்றும் ஆழ்ந்த பகுத்தறிவு திறன் அதிகரிக்கும். விருச்சிகத்தில் உள்ள செவ்வாய், சேவையாற்றும் மனப்பான்மை, திடமான நோக்குகள், மற்றும் தீவிரமான எண்ணங்கள் போன்றவற்றை வழங்கும். இவர்களை திருமணம் செய்யும் போது உடப்பிறப்புகளில் இடையே இருக்கும் உறவானது நன்றாக இருக்கும்.
மகரம்:
செவ்வாயில் மகரம் இருந்தால் உச்ச நிலை அடையும் போது சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை, பொறுமை, செயல்திறன், கட்டுப்பாடு, பொறுப்பு உணர்வு போன்றவை அதிகரிக்கும். நம்பிக்கை, தன்னம்பிக்கை தன்மை அதிகரிக்கும்.
சிம்மம்:
சூரியனின் ராசியான சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதிகார உணர்வு, ஆதிக்கமான நிலை, மற்றும் புகழ் அதிகரிக்கும். இங்கு செவ்வாய் இருந்தால் வீரம், தைரியம், மற்றும் தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
செவ்வாய்க்கு சாதகமற்ற ராசிகள்:
கடகம், மிதுனம், கன்னி போன்ற ராசிகள் சாதகம் அற்றதாக இருக்கிறது.
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..! செவ்வாய் தோஷம் நிவர்த்தி..!
செவ்வாய்க்கு சாதகமான நட்சத்திரங்கள்:
மிருகசீரிஷம் – 3, 4ம் பாதம்:
இந்த நட்சத்திரம் ஆராய்ச்சி, புத்திசாலித்தனம், புதிதாக கற்று கொள்ள கூடிய ஆர்வம் ஆகியவற்றை வழங்கும்.
செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் இருந்தால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன், ஆராய்ச்சி மற்றும் திறமை அதிகரிக்கும்.காதல் வாழ்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை காணப்படும்.
சித்திரை – 1, 2-ம் பாதம்:
கலை, ஆளுமை, கட்டுப்பாடு மற்றும் திறமையான செயல்பாடு போன்றவற்றை வழங்கும். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் செயல் திறன், ஆளுமை, புத்திசாலித்தனம், மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்படும் தன்மை இருக்கும். குடும்பத்தில் பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
அவிட்டம் – 3, 4ம் பாதம்?:
இந்த நட்சத்திரம் சூழ்நிலைகளை சரிவர இசை & கலை ஆர்வம், மற்றும் கடின உழைப்பை குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் செயல்திறன், கடின உழைப்பு, செல்வம் மற்றும் ஆதிக்கம் அதிகரிக்கும். உறவில் பேச்சு திறமை, அழகான வாழ்க்கை மற்றும் செல்வம் நிலை அதிகரிக்கும்.
செவ்வாய் தோஷம் திருமணம்:
1, 4, 7, 8, 12ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். திருமணத்தில் சிக்கல், தாமதம், உறவில் சண்டை, மற்றும் பிரிவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். இதை சமாளிக்க ஒரே தோஷம் உள்ளவருடன் திருமணம் செய்து கொள்வது சிறந்தது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |