செவ்வாய் பெயர்ச்சி 2024
ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகமும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி கொண்டே இருப்பார்கள். இப்படி கிரகங்கள் பெயரை அடையும் பொழுது எல்லா ராசிகளுக்கும் நன்மைகள் கிடைத்தாலும் சில ராசிகளுக்கு அதீத நன்மைகளை வழங்கும். அதில் செவ்வாய் கிரகமும் ஒன்றாக இருக்கிறது. செவ்வாய் கிரகமானது தனுசு ராசியில் இந்த மாதம் கடைசியில் நுழைகிறார். இந்த கிரக மாற்றமானது எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி 2024:
தனுசு:
செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை வழங்க போகிறது. அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் உங்களின் பணிகளை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். நீண்ட நாட்களாக ஏதும் வேலை முடிக்க முஐடியாமல் அதில் பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் நேரத்தை கழிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும், இதனால் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் அதிக ஆர்வத்தை காட்டுவீர்கள். மேலும் தகுந்தவற்றில் முதலீடு செய்வீர்கள்.
வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..?
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியானது எல்லா விதத்திலும் சாதகமாக இருக்கும். சொந்தமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்கிறவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். உங்களின் துணையிடம் நல்லுறவை பரமாரிப்பீர்கள். மேலும் துணையை வெளியிடங்களுக்கு அழைத்து சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் உடன் பிறந்தவர்கள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். புதிதாக நண்பர்கள் கிடைப்பார்கள். பணியியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மேஷம்:
செவ்வாய் பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு ஆசைப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். மேலும் நீண்ட நாட்களாக ஏதும் ஆசைகள் இருந்தால் அவை நிறைவேறும். அரசியலில் உள்ளவர்களுக்கும் சரி, அரசியலில் ஆசை உள்ளவர்களுக்கும் இந்த காலம் சாதகமானதாக இருக்கும்.
2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |