Sevvai Peyarchi Kumbha Rasi in Tamil
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய காலகட்டத்திலும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ராசிகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும் மொத்தம் 3 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதுபோல ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிகளுக்கும் கிரங்கங்ளின் பெயர்ச்சி நடைபெறும். அதாவது கிரகங்கள் எப்போதும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும்.
அப்படி இடம் பெயரும் போது, அனைத்து ராசிக்கும் பல நன்மைகளும் சில தீமைகளும் உண்டாகும். அந்த வகையில் இப்போது, அதாவது மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதாவது வீடு, மனை, தைரியம், உற்சாகம், வீரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திற்கும் காரணியாக இருக்கும் செவ்வாய் பகவான் மகர ராசியில் இருந்து கும்பராசியில் நுழைய உள்ளார். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு ராஜயோகம் உருவாக உள்ளது. அது எந்த ராசிகள் என்று இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
செவ்வாய் பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு பணம் கொட்டி கொண்டே இருக்க போகிறது இந்த 3 ராசிகளுக்கு..
ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..?
மீன ராசி:
செவ்வாய் பெயர்ச்சி காரணமாக மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். உங்கள் குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். உங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பணவரவு அதிகமாக காணப்படும்.
கும்ப ராசி:
கும்ப ராசியில் தான் செவ்வாய் நுழைய உள்ளார். அதனால் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். அனைவரிடத்திலும் சகஜமாக பழகுவது நல்லது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உங்கள் பணியிடத்தில் இருந்து மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகர ராசி:
செவ்வாய் மகர ராசியில் இருந்து வெளியேறுகிறார். அதனால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு, மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும்.
தனுசு ராசு:
செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சில நேரங்களில் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். அதனால் மனதை கட்டுப்படுத்துவது நல்லது. கோபத்தை குறைப்பது நல்லது. இந்த நேரத்தில் எதிர்பார்க்காத பணவரவு கிடைக்கும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால், தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகமாக காணப்படும். அனைத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.
வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..
துலாம் ராசி:
செவ்வாய் பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் அமைதி உண்டாகும். ஆனால் உங்களிடம் இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. பணவரவு மகிழ்ச்சி அளிக்காது. சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால், சில பிரச்சனைகள் உண்டாகும். அதை தைரியத்தோடு எதிர்கொண்டால் ஒரு முடிவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
சிம்ம ராசி:
செவ்வாய் பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் மனதில் எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும்.
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் சில குழப்பங்கள் ஏற்படும். அதனால் எதிர்மறையான சிந்தனைகளை விட்டுவிடுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்வில் இனி வெற்றி கிடைக்கும். பணியில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மிதுன ராசி:
செவ்வாய் பெயர்ச்சியால் மிதுன ராசி காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்களின் மனநிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். இந்த நேரத்தில் அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் பல வெற்றிகள் வந்து சேரும். அனைவரும் உங்கள் பக்கம் நிற்பார்கள். கல்வி துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மேஷ ராசி:
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால், மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். இருந்தாலும் மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக பேச வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |