சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் வெற்றியும், அதிர்ஷ்ட மழையும் பொழியும்..!

Advertisement

Sevvai Peyarchi Palangal in Tamil

வேத ஜோதிடத்தின் படி செவ்வாய் தான் நவகிரகங்களின் தளபதியாக உள்ளார். செவ்வாய் நமது இரத்தத்தை குறிப்பிடுகிறார். மேலும் இவர் தைரியத்தையும், வேகத்தையும், வீரத்தையும் தரக்கூடியவர். இந்நிலையில் செவ்வாய் ஜூலை 1 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சிம்மத்திலேயே இருப்பார். இந்த ராசி மாற்றத்தை பெயர்ச்சி என்று கூறலாம். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மிகுந்த அனுகுலங்கள் கிடைக்க போகின்றது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் அவரகளுக்கு என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை தன்வசப்படுத்தி கொள்ள போகும் 3 ராசிக்காரர்கள்:

ஜூலை 1 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். மேலும் இவர் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சிம்மத்திலேயே இருப்பார். இதனால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி

சிம்ம ராசியில் தான் இந்த செவ்வாயின் சஞ்சாரம் நடைபெற உள்ளதால் இவர்களுக்கு இந்த காலகட்டம் மிக மிக சாதகமாக அமையும். சிம்ம ராசியின் நான்காவது மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் என்பதால் நீங்கள் நல்ல ஆற்றலுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள்.

மேலும் உங்கள் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியில் சென்று முடியும். நான்காம் வீட்டில் செவ்வாயின் பார்வையால் அதிர்ஷ்டம் கூடும். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலம், வாகனம், பண வகையில் நன்மைகள் கிடைக்கும். திடீர் பணவரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்க வீட்டில் என்றும் செல்வம் நிலைக்க இந்த ஒரு பொருள் போதும்

ரிஷபம்:

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாயின் சஞ்சாரம் பலவகையான நல்ல பலன்களை தரும். உங்களின் நான்காம் வீடான சிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

இதனால் புதிதாக வாகனங்கள், சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும் குடும்பத்துடன் இனிமையான பொழுதை கழிப்பீர்கள். மேலும் உங்களின் பொருளாதார நிலை உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசி

இந்த சேவை பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிக மிக சாதகமான பலன்களை தரும். தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க உள்ளார். இது உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

அதாவது இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும், உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் சென்று முடியும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஏதாவது சுபநிகழ்ச்சிகள் நிகழும்.

வெளியூர் சென்று படிக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும்.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement