சனி செவ்வாய் கிரகத்தால் இந்த ராசிக்காரவங்க படாத பாடு படப்போறாங்களாம்..! கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கப்பா..!

Advertisement

ஷடாஷ்டக யோகம்

பொதுவாக ஜோதிடத்தில் கிரங்களின் அடிப்படையில் தான் பலன்கள் என்பது ஒவ்வொரு ராசியினருக்கும் அமைகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் நிகழ்ந்த செவ்வாய் பெயர்ச்சியில் செவ்வாய் பகவான் கடக ராசியில் சஞ்சரித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்பாகவே சனி பகவான் கும்பத்தில் வக்ர நிலையினை பெற்றுள்ளார். இப்போது செவ்வாய் மற்றும் சனி கிரங்கங்களின் அமைப்பினால் ஷடாஷ்டக யோகம் ஆனது இந்த மாதம் இறுதியில் உருவாகிறது. இந்த ஷடாஷ்டக யோகத்தினால் 3 ராசிக்கார்களுக்கு கொஞ்சம் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகவே 12 ராசிகளில் எந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

Sevvai Sani Kiraga Palangal:

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

ராசியில் 5-வதாக அமைந்துள்ள சிம்ம ராசிக்காரரின் அதிபதியாக சூரிய பகவான் சுமுகமான பலன்களை அளித்தாலும் கூட செவ்வாய் சனி கிரகத்தால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் ஆனது உங்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை உண்டாக்கும்.

மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு பூர்விக சொத்து மற்றும் பணம் கொடுத்தல் வாங்குதலில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுபோல உடல் ஆரோக்கியம் சீரற்றதாக இருக்கும்.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள் இத்தகைய நேரத்தில் முக்கிய முடிவுகள் மற்றும் புதிய முயற்சிகள் ஏதேனும் செய்தாலோ அல்லத செய்ய விரும்பினாலோ அது நல்ல பலனை அளிக்கும் விதமாக காணப்படாது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் உறவினர்களால் மனக் கசப்புகள் ஏற்படும். அதேபோல் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம் ராசி:

கடகம்

கடக ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்து இருந்தாலும் கூட சனியன் கிரகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு கவலைகளை அளிக்கும் வகையில் தான் பலன்கள் யாவும் இருக்கிறது. மேலும் நிதிநிலை குறைவாக இருப்பதால் தேவையற்ற கடன்கள் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். ஆகவே கடக ராசிக்கார்கள் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

ஒரு வருடத்திற்கு பிறகு மிதுனத்திற்கு செல்லும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கப்போகுது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement