இந்த ராசிக்காரர்கள் கதவு பக்கத்திலேயே நில்லுங்கள்..! ஏன்னா அதிர்ஷ்டம் கதவை தட்டுனா உடனே திறக்கலாம்ல..!

Sevvai Sukran Serkai in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம்மில் பலருக்கும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அதுவும் இந்த நவீன உலகிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதேபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கிரங்கள் ஓரே ராசியில் இருப்பதில்லை. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அப்படி இடம் பெயரும் போது சில ராசிகளுக்கு நன்மையை செய்யும். சில ராசிகளுக்கு தீமையை செய்யும்.

அதுபோல தற்போது செல்வத்தை அள்ளிக் கொடுப்பவரான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையப் போகிறார். அதுவும் மே 30 ஆம் தேதி இரவு 7.39 மணிக்கு கடக ராசிக்குள் நுழையும் சுக்கிரனின் சஞ்சாரம் ஜூலை 7 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும். மேலும் செவ்வாய் ஏற்கனவே கடகத்தில் இருப்பதால், கடகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டப்போகிறது. அதனால் திறக்க தயாராக இருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை

மிதுன ராசி: 

மிதுன ராசி

கடகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் நடக்கப்போகிறது. பணவரவு பல மடங்காக அதிகரிக்கப் போகிறது. வியாபாரம் செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எந்த செயலிலும் வெற்றி காண்பீர்கள். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும் நேரம் இது. பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மகர ராசி: 

மகர ராசி

இந்த நேரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவர போகிறது.  தொழில் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறுவீர்கள். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்..

கடக ராசி: 

கடக ராசி

சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப்போகிறது. திருமணம் ஆகாத கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். பணியிடத்தில் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் நேரம் இது.

சனியில் உருவாகும்.. இந்த யோகம்.. யாருக்கு நல்ல மாற்றம்.. யாருக்கு அதிர்ஷ்டம்.

மேஷ ராசி: 

மேஷ ராசி

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் தர போகிறது. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் மேல் அதிக அக்கறை காட்டுவீர்கள். பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நேரம் இது தான். வியாபாரத்தில் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்.

கன்னி ராசி: 

கன்னி ராசி

கடகத்தில் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் கன்னி ராசியில் பிறந்தவர்களின்  ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக காணப்படும். இந்த நேரம் பணவரவு உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்