செவ்வாய் வக்கிர பெயர்ச்சியினால் இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க விடும்.!

Advertisement

செவ்வாய் வக்கிர பெயர்ச்சி 2024 | Sevvai Vakra Peyarchi 2024

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவ்வாய் வக்கிர பெயர்ச்சியினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒருவருக்கு ஆற்றல, பலம் ஆகியவற்றை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர், கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கடக ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கினார்.கடக ராசியில் பலம் இழந்த நீச நிலையை அடைகிறார். இப்போது, மேலும், பலம் இழக்கும் வகையில் பின்னோக்கி நகர உள்ளார். இதனால் ஒரு சிலருக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும்.

செவ்வாய் பகவான் அங்காரகன், தேவர்களின் படைத்தளபதி என்றெல்லாம் அழைக்கப்படுபவர். செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 07 ஆம் தேதி, செவ்வாய் வக்ரநிலை எனும் பின்னோக்கி நகரக்கூடிய செய்ய தொடங்க உள்ளார். இதனால், 12 ராசிகளில் குறிப்பிட்ட 5 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செவ்வாய் வக்கிர பெயர்ச்சியினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் பிரச்சனைகள் காணப்படும். செவ்வாய் சுகஸ்தானத்தில் இந்த நகர்வை மேற்கொள்வதால் ஆரோக்கியம் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தொழில், வேலை ஆகியவற்றில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். முக்கியமாக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்:

ரிஷபம்

ரிஷப ராசியின் மூன்றாம் வீட்டில் வக்ர நிலையை அடைய உள்ளார். இதனால், இக்காலத்தில் ரிஷப ராசிகாரர்களுக்கு தைரியம், மன உறுதி குறையும். குடும்பத்தில் சிக்கல்களை உண்டாகலாம். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் கோபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாய் பிற்போக்கு நிலை நடக்க உள்ளது. இதனால், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும். வீண் பயணங்களும் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் நாள் ,  திட்டமிட்டு செயல்படுவது நல்லது. எதிலும் நீங்கள் ஆர்வமின்றி காணப்படுவீர்கள்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசியின் விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் செவ்வாய் வக்ர நிலை அடைய உள்ளது. இதனால் தேவையற்ற மன சங்கடங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும். உடலில் தெம்பு இல்லாதது போல் உணர்வீர்கள். உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது அவசியம். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியத்தில் மன அழுத்தமும், கால் மூட்டு வலியும் ஏற்படக்கூடும்.

கும்பம்:

கும்பம்

கும்ப ராசியின் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர நிலை காரணமாக கடின உழைத்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. வியாபாரத்தில் போட்டி அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். தோல் சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement