Shani Nakshatra Transit 2023 in Tamil
ஜோதிடத்தில், நவகிரங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் வாழ்க்கை முறை கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கிரகரமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போதே அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் நவகிரகங்களின் நீதிபகவானாக திகழும் சனி பகவான் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி அன்று சதய நட்சத்திரத்தில் இருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியாக திகழும் செவ்வாய், சனிபகவானுக்கு எதிரி கிரகம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவற்றின் தாக்கம் முக்கியமாக 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை அளிக்கும். எனவே சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
கன்னி ராசி:
சனியின் நட்சத்திர பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான பலன்களை அளிக்கும். ஆகவே அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு கன்னி ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, எந்தவொரு செயல்களையும் செய்வதற்கு முன்பு ஓன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் தொழில் பிரச்சனைகள், பண பிரச்சனைகள், வேலை பிரச்சனைகள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் எதிலும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
ராகு கேது பெயர்ச்சியால் இனி இந்த ராசிக்கார்களின் வாழ்க்கை பொற்காலமாக மாறப்போகிறது..!
கடக ராசி:
அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கன்னி ராசிக்காரர்களுக்கு பண சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகள் வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாக்கக்கூடும். பணியிடத்தில் அதிக தடைகள் காணப்படும். இதனால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
மீன ராசி:
சனியின் நட்சத்திர பெயர்ச்சி, மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான பலன்களை அளிக்கும். ஆகவே அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.முக்கியமாக பிறரிடம் பணம் வாங்கும்போதும் கொடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் யார் பேச்சையும் கேட்டு முடிவு எடுக்காதீர்கள். அப்படி இல்லையென்றால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல், ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
துலாம் ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்.. அக்டோபர் 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழைதான்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |