Shani Peyarchchi Asuba Yogam Palangal in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. இதனை பெயர்ச்சி என்பார்கள். இந்த பெயர்ச்சியில் கிரகங்களுக்குள் ராசிகள் மாற்றம் மட்டுமின்றி இவற்றின் இயக்கங்கள், அஸ்தமம், உதய நிலைகள் என பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல வகையான நன்மைகள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கின்றன. இதே போல் இந்த ஆண்டு சனி பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிக அளவு பாதிப்புகள் ஏற்படவிருக்கின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றியும் அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சனி பெயர்ச்சியால் உருவாகும் அசுப யோகத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் 4 ராசிக்காரர்கள்:
இந்த ஆண்டு நிகழவிருக்கும் சனி பெயர்ச்சியில் உருவாகும் அசுப யோகத்தால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிக அளவு பாதிப்புகள் ஏற்படவிருக்கின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றியும் அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றியும் இங்கு காணலாம்.
சிம்ம ராசி:
இந்த சனி பெயர்ச்சியில் உருவாகும் அசுப யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் அதிக அளவு ஏற்படும். அதாவது உங்கள் வாழ்க்கையில் டென்ஷன் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
அதே போல் உங்களின் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால் நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பெரிய பிரச்சனையில் உங்களை உள்ளாக்கும். இந்த கால கட்டத்தில் உங்களின் வாழ்க்கையில் செலவுகள் அதிகரிக்கும்.
கடக ராசி:
இந்த சனி பெயர்ச்சியினால் உருவாகும் அசுப யோகம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையினை பிரட்டி போடப் போகின்றது என்றே கூறலாம். அதாவது கடக ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த கால கட்டத்தில் சொத்து விஷயத்தில் ஒரு சில சச்சரவுகள் காணப்படும். அதே போல் நீங்கள் பணத்தை முதலீடு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த அசுப யோகம் பல வகையான புது புது பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த கால கட்டத்தில் நீங்கள் அநேக மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.
அதே போல் இந்த கால கட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் பல தவறான புரிதலினால் பல வகையான கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வாகனத்தில் செல்லும்பொழுது அதிக கவனம் தேவை.
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் ஜாக்போர்ட் அடிக்க போகுது
தனுசு ராசி:
இந்த சனி பெயர்ச்சியினால் உருவாகும் அசுப யோகம் தனுசு ராசிக்காரர்களின் பல வகையான குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளை அளிக்கும். அதாவது இந்த கால கட்டத்தில் பல மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதே போல் நீங்கள் உங்களின் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும் உங்களின் வாழ்க்கையில் செலவுகள் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |