வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் பாடல் வரிகள்.! | Shiva Panchakshara Stotram Lyrics in Tamil

Updated On: February 25, 2025 6:15 PM
Follow Us:
Shiva Panchakshara Stotram Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Shiva Panchakshara Stotram Lyrics in Tamil | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

அனைவருக்கும் இஷ்ட கடவுள் என்று ஒரு கடவுள் இருக்கும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அக்காலத்தில் உள்ள பலபேர் ஒவ்வொரு கடவுளை போற்றும்வகையில் பாடல்களை பாடியுள்ளனர். இப்பாடல்களை பாடும்போது மனதிற்கு அமைதியும் கடவுளின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே அந்தவகையில், ஆதி குரு சங்கராச்சாரியார் அவர்கள் சிவபெருமானின் ஆசிகளைப் பெறுவதற்கு இயற்றப்பட்ட‌து தான் சக்திவாய்ந்த சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்.

இப்பாடல் வரிகளை சிவனுக்கு அருகில் உச்சரிப்பதன் மூலம் அவர் பேரின்பம் அடைவார் என்று கூறப்படுகிறது. எனவே, இப்பதிவில் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் பாடல் வரிகளை பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

லிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள்

Shiva Panchakshara Stotram Lyrics in Tamil:

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம ஷிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம காராய நம ஷிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஷி காராய நம ஷிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய
தஸ்மை வ காராய நம ஷிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காராய நமஷிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம் ய படேச் சிவ
சன்னிதௌ சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் Pdf

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் பாடலின் பொருள்:

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

யார் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை சிவனுக்கு அருகில் உச்சரிக்கிறாரோ, அவர் சிவபாதம் சேர்ந்து பேரின்பத்தில் திளைப்பார். இது ஆதி குரு சங்கராச்சாரியார் சிவபெருமானின் அருளை பெறுவதற்கு இயற்றப்பட்ட பாடல் ஆகும்.

பாடல்:

நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம ஷிவாய

பொருள்:

நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘ந‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்! என்பதே இதன் பொருள்.

பாடல்:

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம காராய நம ஷிவாய

பொருள்:

மந்தாகினி நதிநீர் கொண்டு வணங்கப்பட்டு, அரைத்த சந்தனம் பூசப்படுபவனே, நந்தியால் வணங்கப்படும் தேவனே, பூதகணங்களாலும் வணங்கப்படும் தலைவனே மகேஸ்வரனே, மந்தாரை மலரையும் இன்னும் பல மலர்களையும் கொண்டு வணங்கப்படுபவனே ‘ம‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பாடல்:

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஷி காராய நம ஷிவாய

பொருள்:

தாமரை முகத்தாள் கௌரியின் முகம் மலர காரணமான அதிகாலை சூரியனைப் போன்றவனே, மங்களகரமானவனே, தட்சணின் யாக அர்ப்பணத்தை அழித்தவனே, நீல நிறத்தில் கழுத்தும், காளை வாகனமும் கொண்டவனே, ‘சி‘ கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பாடல்:

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய
தஸ்மை வ காராய நம ஷிவாய

பொருள்:

வஷிஷ்ட்டன், அகத்தியன், கௌதமன் போன்ற சிறந்த, பெரும் முனிவர்களாலும், வானுறை தேவர்களாலும் வணங்கப்படுபவனே, பிரபஞ்சத்திற்கே மகுடமாக இருப்பவனே, சந்திரன், சூரியன். அக்னியைத் தனது மூன்று கண்களாகக் கொணடவனே, ‘வா‘கார அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பாடல்:

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காராய நமஷிவாய

பொருள்:

தியாகத்தின் திருவுருவானவனே, சடை முடி தரித்தவனே ஆதியும் அந்தமும் இலாதவனே, திரிசூலம் ஏந்தியவனே, தெய்வீகமானவனே, ஒளி பொருந்திய மேனியனே, நாற்திசைகளையும் ஆடையாக அணிந்தவனே, ‘ய‘கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பாடல்:

பஞ்சாஷரமிதம் புண்யம் ய படேச் சிவ
சன்னிதௌ சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொருள்:

சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தின் பலஸ்துதி பகுதியில், பஞ்சாக்ஷரமிதம் புண்யம் முதல் சிவேன சாஹ மோததே வரையிலான கடைசி வரிகள் சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தின் பலன்களை தெளிவாக விளக்குகிறது.

சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்..!

சீரடி சாய்பாபாவின் மாலை நேர ஆரத்தி பாடல் வரிகள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now