வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாறும் அதிசய கோவில் பற்றி தெரியுமா.?

Updated On: June 18, 2026 4:46 PM
Follow Us:
Shivaganga temple ghee to butter in tamil
---Advertisement---
Advertisement

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாறும் அதிசய கோவில் பற்றி தெரியுமா.?

கடவுளுக்கு பூஜை செய்யும் போது விளக்கேற்றி சூடம் காண்பித்து தீபாரதனை செய்வார்கள். அதுவே கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகமானது ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகங்களை பார்ப்பதன் மூலம் நமது வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

அந்த வகையில் சிவன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யும் போது வெண்ணையாக மாறும் அதிசியம் நடக்கிறது. அது எந்த ஊர் கோவில் எங்கே இருக்கிறது போன்ற தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

சிவகங்கையில் அமைந்துள்ள சிவன் கோவில்:

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாறும் அதிசய கோவில் பற்றி தெரியுமா.?

சிவகங்கையில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நடக்கும் அதிசியம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த சிவ லிங்கத்தை பார்ப்பதற்காகவே பல பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சிவகங்கையில் உள்ள கோவில் 1,368 மீட்டர் (4,488 அடி) உயரம் கொண்ட ஒரு மலை உச்சியில் இருக்கிறது. இது இந்தியாவின் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் டோபாஸ்பேட் அருகே அமைந்துள்ள இந்து புனித யாத்திரை மையம் ஆகும் . இது துமகுரு நகரத்திலிருந்து 25 கிமீ  மற்றும் பெங்களூருவிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது .

புனிதமான மலையானது சிவலிங்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உள்ளூர் “கங்கா” என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்று அருகில் பாய்கிறது. இது தட்சிண காசி ( தெற்கின் காசி ) என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் கங்காதரேஸ்வரர் கோவில், ஸ்ரீ ஹொன்னம்மாதேவி கோவில், ஒலகல் தீர்த்தம், நந்தி சிலை, பாதாளகங் சாரதாம்பி கோவில் மற்றும் அகஸ்திய தீர்த்தம், கண்வ தீர்த்தம், கபில தீர்த்தம், பாதாள போன்ற பல தீர்த்தங்கள் உள்ளன.

Shivaganga Temple Ghee to Butter:

இந்த கோவிலில் சிவலிங்கத்தில் நெய் கொண்டு அபிஷேகம் செய்யும் போது வெண்ணையாக மாறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த வெண்ணெயை எடுத்து பயன்படுத்தும் போது நோய்கள்  சரியாகிறது என்று நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில் விவரங்கள்..!

இந்த கோவிலில் கருவறையிலிருந்து காவி கங்காதேஸ்வரர் கோவிலுக்கு சுரங்கப்பாதை இருக்கிறது. குமுட்வதி ஆறு இந்த மலையிலிருந்து தான் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த மலையை ஒவ்வொரு திசையிலிருந்து பார்த்தால் ஒவ்வொரு உருவமாக காட்சியளிக்கும்.மேற்கு பக்கத்திலிருந்து பார்க்கும் போது விநாயகர் உருவமும், வடக்கு பக்கத்தில் இருந்து பார்க்கும் போது  பாம்பு, சிவலிங்கம், நந்தி போன்று காட்சியளிக்கும்.

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாறும் அதிசய கோவில் பற்றி தெரியுமா.?

இந்த கோவிலில் இருக்கும் இன்னொரு அதிசியம் என்னவென்றால் ஓலக்கல்லு தீர்த்தமாகும். இந்த தீர்த்தமானது குகையிலிருந்து கிடைக்கிறது. இந்த குகையின் அளவானது ஒரு கையை மட்டும் விட  கூடிய அளவில் தான் இருக்கும். இந்த குகையில் சில பேர் கையை  விட்டு தண்ணீரை தொட்டு பார்த்ததாக கூறுகிரார்கள். சில பேர் தண்ணீரை அள்ளி பார்த்தேன் என்று கூறுகிரார்கள்.

இதற்கு என்ன காரணம் என்னவென்றால் புண்ணியம் செய்தவர்களுக்கு தண்ணீரை அள்ளி பார்க்கமுடியும். பாவம் செய்தவர்களுக்கு தொட்டு பார்க்க முடியாது என்ற நியதி இருக்கிறது.   இந்த கோவிலுக்கு சென்று உங்களின்  புண்ணியம் மற்றும் பாவங்களை அறிந்து  கொள்ளுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now