வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆடம்பரத்தின் அதிபதி சுக்ரனின் பார்வையால் எந்த 6 ராசிக்காரர்களுக்கு தீபாவளி நன்னாளில் பலன்கள் ஏற்படும்.

Updated On: November 6, 2023 10:45 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில்ஆடம்பரத்திற்கு அதிபதியாக காணப்படும் சுக்கிரன், நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பயணிக்கிறார். கன்னி ராசியில் சுக்கிரன் நவம்பர் 29-ம் தேதி வரை இருப்பார். இதன் மூலம் நவம்பர் 03 ஆம் தேதி முதல் இந்த 6 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 6 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சுக்கிரன் மற்றும் கேது இணைவதால் பலன் அடையும் ராசிகள்:

மிதுனம்:

mithunam rasi

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி சிறப்பானதாக காணப்படும். அதாவது சுக்கிரன், கேது உடன் இணைவதால் நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும். நீண்ட நாட்களாக இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். செல்வா நிலை உயரும். சொந்தங்களால் நன்மை கிட்டும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

கடகம் :

kadaka rachi

 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ஆட்சி அனைத்து விதமான மங்கள நன்மைகளும் கிடைக்க கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் பதவியும் உயரும். பணியிடத்தில் பனி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும். மாணவர்கள் அவர்களின் கனவுகளை நோக்கிய உங்கள் பயணம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்.

கன்னி:

puthan peyarchchi palankal in tamil

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் கேது நிலையானது சாதகமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல லாபம் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அதேபோல் புதிய முயற்சிகள் வெற்றி அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.

விருச்சிகம் :

viruchigam rasi thipavali palan

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை மகத்தான பலன்களை வழங்குகிறது. இந்த காலங்களில் உங்கள் இல்லத்தில் சுபகாரியங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளது. உங்கள் தொழில் மற்றும் பணியிடை சூழல் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

தனுசு:

தனுஷ ராசி

சுக்கிரன் பகவான், தனுச ராசியின் 5- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், தனுச ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் வருமான உயர்வு உண்டாகும். மேலும், இதுவரை உங்கள் கைக்கு வராமல் சிக்கிய பணம் உங்களிடம் வந்து சேரும். குழந்தைகளால் நற்செய்திகளை பெறுவீர்கள். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.

மகரம்:

puthan peyarchchi

சுக்கிரன் பெயர்வு மகர ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை வழங்க போகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணி உயர்வுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் அடுத்த நிலையை அடைய நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும்.பண வரவில் குறைவிருக்காது. சேமிப்பு அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now