சுக்கிர பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்

Advertisement

சுக்கிர பெயர்ச்சி 2024

ஆன்மிகத்தில் ஒவ்வொரு பெயர்ச்சியும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் கிரக பெயர்ச்சியினால் நம்முடைய வாழ்க்கை நிலை மாறுபடும். அதுவும் கிரகத்தை பொறுத்து நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். ஒரு கிரக பெயர்ச்சி நடக்க போகிறது என்றால் அதனால் யாருக்கு பாதிப்பு, யாருக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வது இயல்பு. ஏனென்றால் அப்போது தான் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

அந்த வகையில் இந்த மாதம் கடைசியில் சுக்கிரன் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில்  பெயர்ச்சிக்கு அடைகிறார். இவர் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்க போகிறார். அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதியாக சனி இருக்கிறார். அதனால்  வெற்றி, புத்திசாலித்தனம், வணிகம், முதலீடு, ஆன்மீகம் போன்றவை தொடர்பு உடையதாக இருக்கிறது. இதில் சுக்கிர பகவான் நுழைவதால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலமாய் இருக்க போகிறது என்று அறிந்து கொள்வோம்.

சிம்மம்:

சுக்கிர பெயர்ச்சி சிம்ம ராசிகளின் வாழ்க்கையானது நிம்மதி நிறைந்ததாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்க போகிறது. 2023-ம் ஆண்டு ஏதும் பிரச்சனை இருந்து அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்தீர்கள் என்றால் 2024-ம் ஆண்டு அந்த பிரச்சனைக்கான முடிவை காண்பீர்கள்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள்;இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். மேலும் புதிதாக விலை உயர்ந்த பொருட்களான வீடு அல்லது பைக் போன்றவை வாங்குவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு பணம் கொட்டி கொண்டே இருக்க போகிறது இந்த 3 ராசிகளுக்கு..

கடகம்:

கடக ராசி

சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையானது சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் யாரும் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் வெற்றியை அடைவீர்கள்.

வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இதுவரை குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். மேலும் உங்களின் நிதிநிலைமை சிறப்பானதாக இருக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

ரிஷபம்:

சுக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த கால கட்டம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறப்பானதாக இருக்கும். இதுவரை திருமணம் தள்ளி போனவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். மேலும் லாபம் அதிகரிக்கும். இதனை சரியானவற்றில் முதலீடு செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களின் ஆளுமை திறமை மேம்படும்.

வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement