Shukra Peyarchi 2024 | Sukra Peyarchi Palangal in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ஆன்மீக பக்தர்களுக்கு பயன் தரும் தகவலை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ராசிகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும், 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதுபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும்.
அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது, மற்ற ராசிகளுக்கு நன்மைகளையும் தீமைகளையும் தரும் என்பது ஐதீகம். அதுபோல செல்வம், சுகம், ஆடம்பரம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியாக இருப்பவர் தான் சுக்கிர பகவான். இவர் தற்போது மார்ச் 31 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.31 மணிக்கு மீன ராசிக்கு மாறுகிறார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கப்போகிறது. அப்படி அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சந்திர கிரகணத்துக்கு பிறகு சூரியன், ராகு, கேது பெயர்ச்சியால் ராஜ யோகம் கிடைக்கும் ராசிகள்
சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களின் 9 ஆம் வீட்டில் தான் சுக்கிரன் நுழைந்துள்ளார். இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்க போகிறது. நீங்கள் தொடங்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் பல நன்மைகள் நடக்கப்போகிறது. உங்களின் 8 ஆம் வீட்டில் தான் சுக்கிரன் நுழைய போகிறார். இதனால் பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும் நேரம் இது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். இந்த நேரம் உங்களுக்கு பொன்னான நேரமாக இருக்கும்.
100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இனி இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..
மீன ராசி:
சுக்கிர பகவான் மீன ராசியில் தான் பெயர்ச்சியாக உள்ளார். அதனால் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை செய்வார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சம்பள உயர்வும் கிடைக்கும் நேரம் இது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்நேரம் மகிழ்ச்சி தரும் நேரமாக இருக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் பல நன்மைகளை பெறுவார்கள். வேளையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. திருமணம் முடியாதவர்களுக்கு விரைவாக திருமணம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
விருச்சிக ராசி:
சுக்கிர பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கப்போகிறது. உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். இந்த நேரம் உங்களுக்கு லாபகரமான நேரமாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |