சுக்கிர பெயர்ச்சி 2025
ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி அடையும். இந்த பெயர்ச்சியானது ஒரு நாளும் இருக்கும், பல வருடமும் இருக்கும், இவை ஒவ்வொரு கிரகத்தின் சுழற்சியை பொறுத்து மாறுபடுகிறது. அந்த இப்படி கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போது ஒவ்வொரு ராசிகளில் நன்மைகளும் நடக்கும், தீமைகளும் நடக்கும். வருணனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுக்கிர பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். வருண கிரகம் நெப்டியூன் என்றும் அழைக்கப்படுகிறது. இது சுமார் 13 ஆண்டுகள் ஒரே ராசியில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு ராசி சுழற்சியை முடிக்க வருண கிரகம் சுமார் 164 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. இந்த பெயர்ச்சியினால் 3 ராசிகளுக்கு ராஜ யோகம் கிடைக்க போகிறது. அதனை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
மிதுனம்:
சுக்கிரன் மற்றும் வருணனின் சேர்க்கை ஆனது மிதுன ராசிக்காரர்களுக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும். மிதுன ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரனும், வருணனும் இணைந்து உள்ளார்கள். இதனால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு உகந்த நாட்களாக இருக்கிறது. அலுவலகத்தில் நற்பலன்களை பெறுவீர்கள். உங்களின் அறிவு திறன் மேம்படும். மேலும் உங்களின் வேலைகளை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். பணியில் உள்ள சக பனியாளர்களிடம் உள்ள உறவானது ஆரோக்கியமாக காணப்படும். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை காணப்படும்.
அதுவே தொழில் செய்பவராக இருந்தால் உங்களின் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் பணவரவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். நீங்கள் புதிதாக எந்த தொழிலாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு புதிய விஷயமாக இருந்தாலும் சரி அவை அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரனும், வருணனும் சேர்கிறார்கள். இதனால் துலா ராசிக்காரர்களுக்கு பலவிதமான மாற்றங்கள் மற்றும் நன்மைகளை பெறுவார்கள். சுக்கிரன் மற்றும் வருணனின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சக பணியாளர்களிடம் உள்ள உறவானது ஆரோக்கியமானதாக இருக்கும். உங்களுக்கு எல்லா நேரத்திலும் சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இதனால் நீங்கள் பணியில் வெற்றியை அடைவீர்கள். மேலும் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். யாரேனும் அரசு தேர்வுகள் அல்லது ஏதேனும் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகியிருந்தால் இந்த நேர்மை உங்களுக்கு சாதகமாக இருக்கும். தேர்வில் வெற்றியை அடைவதற்கு இந்த பெயர்ச்சி உதவியாக இருக்கும். அதற்காக தயார் ஆக வேண்டாமா என்று நினைக்க கூடாது. நீங்கள் தேர்விற்கு உங்களை தயார் படுத்தி கொள்வதோடு மட்டுமில்லாமல் அதிர்ஷ்டமும், கடவுளின் அருளும் இருந்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற முடியும். அதற்கு இந்த பெயர்ச்சி உதவியாக இருக்கும்.
பணம் கொட்ட போகிறது.! அள்றதுக்கு ரெடியா இருந்துக்கங்க.! யார் யாருன்னு தெரியுமா.?
கன்னி:
கன்னி ராசிக்கார்களுக்கு சுக்கிரனும், வருணனும் சேர்வது சாதகமான பலன்களை பெற முடியும். கன்னி ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரனும், வருணனும் சேர்கிறார்கள். இதனால் உங்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காணப்படும். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நாட்கள் ஆகியும் வரன் அமையாமல் இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமண வரன் கைகூடும். பணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாட்களாக இருக்கும். உங்களின் இலக்குகளை அடைவதற்கு தந்தை பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். மேலும் நீங்கள் எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். மேலும் நீங்கள் ஏதும் முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையின் படி எடுப்பது உங்களுக்கு நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனால் பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. இதனால் பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |