Shukra Planet Asthamanam Palangal in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் உள்ள சுக்கிர பகவான் தான் நமது வாழ்க்கைக்கு தேவையான பணம், பொருள் வசதிகள், அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக இருக்கின்றாரா. இவரது ஒவ்வொரு நிகழ்வும் நமது வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் சுக்கிர பாகவன் சிம்ம ராசியில் ஆகஸ்ட் மாதம் அஸ்தமனம் ஆகுகின்றார். இதனின் தாக்கம் பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த அஸ்தமானம் அவ்வளவு நல்ல பலனை அளிக்காது. ஆனால் ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக மிக நல்ல பலனை அளிக்கும். அவ எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை இன்றைய பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகுது
Which Zodiac Sign will Get Luck in Sukra Asthamanam in Tamil:
சுக்கிர பாகவன் சிம்ம ராசியில் ஆகஸ்ட் மாதம் அஸ்தமனம் ஆகுகின்றார். ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் வக்ர நிலையிலான இயக்கத்தில் அஸ்தமனம் ஆவது அசுபமாக கருதப்படுகிறது.
ஆனால் இந்த 3 ராசிகளுக்கு மட்டும் சுக்கிரனின் அஸ்தமனம் நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை பற்றியெல்லாம் இங்கு காணலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சுக்கிரனின் முழுமையான ஆசிர்வாதமும், நல்ல பலனும் கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையில் மிகவும் நல்ல சாதமான சூழ்நிலைகளை உருவாக்கும்.
இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை மிக மிக சிறப்பாக இருக்கும். அதேபோல் நிதிநிலைமையும் முன்பைவிட மிக மிக சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிக மிக அதிர்ஷ்டத்தை தேடி தரும். பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும். கூட்டாண்மை வேலை குறிப்பாக நன்மை தரும்.
திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் தான் இந்த அஸ்தமனம் நிகழ்வதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணம் எங்காவது சிக்கியிருந்தால் அது இந்த காலகட்டத்தில் உங்களிடம் வந்து சேரும்.
பங்குச் சந்தை, லாட்டரி மூலம் பணம் கிடைக்கும். உங்களின் காதலுக்கு வெற்றி கிடைக்கும் இனி சேமிப்புப் பயணம் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |