சிம்மத்தில் சுக்கிரன் இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்..

Advertisement

சிம்மத்தில் சுக்கிரன் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம்

ஒவ்வொரு கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நாளிற்கு பிறகு தங்களின் ராசியை மாற்றி கொண்டே இருப்பார்கள். இந்த கிரங்களின் மாற்றத்தால் நன்மை மற்றும் தீமை இரண்டுமே இருக்கும். சிம்ம ராசியில் சுக்கிர பகவான்  ஜூலை 23 ஆம் வக்கிரப்பெயர்ச்சி அடைந்து அக்டோபர் 2 ஆம் வரை சிம்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு கஷ்ட காலமும் ஏற்பட போகிறது அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியால் யார் யாருக்குல்லம் கஷ்டகாலம்:

மீனம்:

மீனம் ராசி

மீன ராசியில் 6 ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது, கஷ்டத்தை தான் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் வயிற்று வலி, வாய்வு, செரிமான பிரச்சனை  போன்றவை உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும். மீன ராசிக்காரர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த காலம் நீங்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி.! நவம்பர் மாதம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.!

மகரம்:

மகரம் ராசி

உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த காலம் உங்களுக்கு மன கஷ்டத்தை அதிகப்படுத்தும். நீங்கள் உங்களின் விஷயத்தை மற்றவரிடம் பகிர வேண்டாம். ஏனென்றால் அதனால் கூட பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காது. ஏதாவது முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த காலம் உங்களுக்கு ஏற்றவையாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சாப்பிடும் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம்

சுக்கிரன் உங்கள் ராசியின் 10 ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சக பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். முதலீடு செய்வதை தவிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும்.

புதன் சுக்கிரன் சேர்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரவங்க இவங்க தானா..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement