கெட்ட சகுனத்தின் அறிகுறிகள்
இன்றைய பதிவில் வீட்டில் கெட்ட நேரம் வருவதற்கான அறிகுறிகளை பற்றி பார்க்கப் போகிறோம். நம் அனைவருக்கும் நல்ல விஷயங்கள் நடக்க போகிறது என்பதை எப்படி சில அறிகுறிகளின் மூலம் உணர முடிகிறதோ அதேபோல் கெட்ட வருவதற்கு முன் சில அறிகுறிகள் நமக்கு நடக்கும். நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் என இரண்டும் சமமாக இருக்கும். ஆனால், ஒருசிலர் வாழ்க்கையில் கெட்ட நேரம் இருந்துக்கொண்டே இருக்கும்.
இதில் வேலையில் பிரச்சனை, மன அழுத்தம், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். இது போன்ற கெட்ட விஷயங்கள் நடப்பதற்கு முன்பு நம் வீட்டில் கெட்ட சகுனத்திற்கான அறிகுறிகள் காட்டும். மேலும், நம் வாழ்க்கையில் எந்த மாதிரி சகுனங்கள் ஏற்பட்டால் கெட்ட சகுனம் வருவதற்கான அறிகுறியாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….
கெட்ட சகுனம்:
- குங்குமம் சிதறுதல் வீட்டில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது
- உங்கள் வீட்டில் தண்ணீரை சிந்தினால் உங்களுக்கு கடன் பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
- வீட்டில் உப்பு கீழே கொட்டினால் பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை உணர்த்துகிறது.
- உங்கள் வீட்டில் அரிசியை சிந்தினால் வீட்டில் சண்டைகள் வரக் கூடும்.
- வீட்டில் இருக்கும் துளசி செடி காய்ந்து போனால் வீட்டிற்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
- வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் உடைந்து போனால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்த்துவதாகும்.
- வீட்டில் இருக்கும் தங்க நகைகள் மற்றும் பணம் இரண்டும் அடிக்கடி தொலைந்து போனால் வீட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும்.
- ஒருவரது வீட்டில் பணம் தங்காமல் வருவதும் போவதுமாக இருந்தால் மகாலெட்சுமி அவர்கள் மீது கோபமாக இருப்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
- வீட்டிற்கு ஆந்தை புகுந்தாள் கெட்ட சகுனத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
- உங்கள் வீட்டில் சண்டைகள் இருந்துக்கொண்டே இருந்தால் அங்கு லட்சுமி தேவி இருக்கமாட்டார் என்பதற்கான அறிகுறியாகும். இதனால் வீட்டில் பண நெருக்கடி ஏற்படக் கூடும்.
- பூஜை அறையில் பூஜை செய்யாமல் இருப்பதும், பூஜை அறையை தூசியாக வைத்திருப்பதும் கெட்ட சகுனத்தின் அறிகுறியாகும்.
- வீட்டில் இருக்கும் பெரியவர்களை அவமதித்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவாது இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
- வீட்டில் இருக்கும் பல்லி கிழக்கு திசையில் சத்தம் போட்டால் கெட்ட சகுனத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
- நமது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
கெட்ட நேரம் என்றால் என்ன?
கெட்ட நேரம் என்பது வாழ்க்கையில் தடைகளையும், சவால்களையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை குறிக்கிறது. வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வருவதை கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. தொடர்ந்து வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவது மற்றும் நமக்கு எதிர்மறையான விஷ்யங்கள் நடப்பதை கெட்ட சகுனம் என்று கூறுவார்கள்.
வெறும் காலில் நடப்பது நல்லதா கெட்டதா?
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |











