வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

18 ஆண்டுகளுக்கு பிறகு புதன் கேது சேர்க்கையால் பணக்காரர்களாக ஆகும் 4 ராசிகள் இதோ

Updated On: June 6, 2025 1:18 PM
Follow Us:
Signs that become rich due to Mercury Ketu conjunction
---Advertisement---
Advertisement

புதன் கேது சேர்க்கை

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு கிரக இயக்கமும் வெவ்வேறு வகையான பலன்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கிரக மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு பலன்களை வழங்குகிறது. சில கிரகங்கள் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றன.

கேதுவும், புதனும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்க்கையானது அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது. புதன் சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறார் மற்றும் கேது ஏற்கனவே சிம்ம ராசியில் இருக்கிறார். இந்த சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

மகரம்:

புதனும், கேதுவும் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளி தர போகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த காலத்தில் நீங்கள் செல்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.பணவரவு அதிகமாக காணப்படும். இதனை வைத்து உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டிருந்தால் அவை முடிவுக்கு வரக்கூடும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு:

கேது மற்றும் புதன் இணைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதக,மான பலன்களை கொடுக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு முதலீடு செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது. உங்களின் எல்லா செயல்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். உங்களின் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவடையும்.

விருச்சிகம்:

விருச்சியாக் ராசிக்காரர்களுக்கு கேது மட்டும் புதன் இணைவது சிறப்பானதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிதாக சொத்து அல்லது வாகனம் வாங்குவீர்கள். திருமண வாழ்கை சிறப்பினதாக இருக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சி காணப்படும்.

சிம்மம்:

கேது மற்றும் புதன் இணைவதால் சிம்ம  ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சிறப்பானதாக இருக்க போகிறது. நீங்கள்செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் உழைப்போடு, அதிர்ஷ்டமும் இருக்கக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலமும் வருமானமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வரன் அமையும். திருமானவர்களின் வாழ்க்கையில் குழந்தை வரன் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now