சிம்ம ராசிக்காரர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா?

Advertisement

சிம்ம  ராசி குணம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணங்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். உங்கள் ராசியின்  அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால் ராஜ குணங்கள் அதிகம் இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் மகம், பூரம், உத்திரம் போன்ற நட்சத்திரத்தை கொண்டவர்கள். 1 ஆம் பாதம் போன்றவை இதில் அடங்கும். சிம்ம ராசிக்காரர்கள் சிங்கத்தை அடையாளமாக கொண்டதால் சிங்க போலவே இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது எதற்கும் துணிந்து செயல்படும் திறன் கொண்டவராக இருப்பார்கள். மேலும் இவர்களின் பொதுவான குணங்கள் மற்றும் அதிஷ்ட பலன்களை நம் பதிவில் படித்து அறியலாம் வாங்க.

கன்னி ராசியின் பொது பலன்கள் மற்றும் குணங்கள்

 

சிம்ம ராசி குணங்கள்:

  • சிம்ம ராசியில் பிறந்தவர்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு வீரமும், கம்பீரமும் இருக்கும்.
  • இவர்கள் அழகாகவும் அறிவாகவும் இருப்பார்கள்.
  • எல்ல விஷயங்களிலும் அதிகம் கோவப்படுவார்கள், இவர்களுக்கு முன் கோபம் அதிகமாவே இருக்கும்.
  • இவர்கள் ஒரு விஷயத்தை முடிவு எடுத்தால் அதை நடத்தி காட்டவேண்டும் என்று செயல்படுவார்கள். அதாவது எந்த விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்று நினைப்பார்கள்.
  • இந்த ராசிகாரர்கள் சிந்தனை, செயல், சொல் போன்ற எல்லா விஷயங்களிலும் வேகமாகவே இருப்பார்கள்.
  • இவர்களுக்கு  யாரும் ஏதும் குறைகள் சொன்னாலும், துரோகம் செய்தலும் இவர்களுக்கு பிடிக்காது.
  • இவர்கள் எதிரிகளை கூட மன்னிப்பார்கள், ஆனால் துரோகிகளை மன்னிக்கவே மாட்டார்கள்.
  • உணவு பழக்கவழங்களை பொறுத்தவரை உணவு சூடாகவும், சுவையாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பர்கள், உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள்.
  • இவர்கள் அழகான வட்டமான முகத்தையும், அழகான கண்களையும், உடலுக்கு தகுந்த உயரத்தையும் கொண்டிருப்பார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் படித்த படிப்பிற்கு தகுந்த வேலைகளில் இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் பணம் சம்பாரிப்பதில் கெட்டிக்காரர்கள்.
  • இவர்கள் பெருமபாலும் அன்பும், மரியாதையும், பணிவு போன்றவற்றால் பெரியவர்களிடம் நடந்துகொள்வார்கள்.
  • யாரிடமும் கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகும்.
  • இவர்களிடம் வேலை சொல்வதற்கு மிரட்டி வாங்குவதை விட அன்பாக சொன்னாலே செய்துவிடுவார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்துவதை விட எதிர் காலத்திற்கு கவனம் செலுத்தும் திறமைகளை உடையவராக இருப்பார்கள்.
  • இவர்கள் விடாமுயற்சிகளுடன் செயல்படுவார்கள், ஆனால் வீணாக யாரிடமும் சண்டைக்கு போக மாட்டார்கள்.
  • இவர்கள் சந்தேகப்படும் குணங்களை கொண்டுள்ளவர்கள். இவர்கள் அம்மாவை அதிகம் நேசிப்பார்கள்.
  • இவர்கள் சினிமா பார்ப்பதை அதிகம் விரும்புவார்கள்.

சிம்ம ராசி திருமண வாழ்க்கை:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஒரு சிலர் காதலித்து திருமண செய்வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பல சிரமங்களையும் தாங்கிக்கொள்வார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக சிரமங்கள் ஏற்படும்.

நட்பு ராசிகள்:

மீனம், மேஷம், கடகம், மிதுனம், விருச்சிகம், தனுசு, கன்னி போன்ற ராசிகளுடன் நட்பாக இருப்பார்கள்.

சிம்ம ராசி அதிர்ஷ்ட நிறம்:

சிவப்பு மற்றும் தங்க நிறம் போன்றவை இவர்களுக்கு அதிஷ்டமான நிறங்கள் ஆகும்.

சிம்ம ராசி அதிர்ஷ்ட எண்:

1மற்றும் 4 போன்ற எண்கள் உங்களுக்கான அதிஷ்ட எண்களாகும்.

சிம்ம ராசி அதிர்ஷ்ட நாள்:

ஞாயிற்று கிழமை

சிம்ம ராசி அதிர்ஷ்ட கல்:

மாணிக்கம் கல்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement