Siththirai Puththandu 2023
வணக்கம் நண்பர்களே..! நாம் என்ன தான் ஆங்கில புத்தாண்டை விமர்சையாக கொண்டாடினாலும், தமிழ் புத்தாண்டுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. காரணம் தமிழ் புத்தாண்டு என்பது தமிழர்களின் புதிய தமிழ் ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். அதனால் நாளைய தினம் அதாவது ஏப்ரல் 14 , 2023 வெள்ளிக்கிழமை அன்று நம் அனைவரின் வீடுகளும் விசேஷமாக இருக்கும். அதுபோல நாமும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவோம். இந்த மகிழ்ச்சியான நன்னாளிலும் நம்மில் பலருக்கும் இந்த கேள்வி இருக்கும். அது என்னவென்றால், தமிழ் புத்தாண்டு எத்தனை மணிக்கு பிறக்கிறது என்ற கேள்வி இருக்கும். அதை தான் நாம் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம்.
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்..!
தமிழர்களின் பண்டிகைகளில் சித்திரையில் வரும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பெற்ற ஒன்றாகும். தமிழ் புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
நாளைய அதாவது ஏப்ரல் 14 , 2023 வெள்ளிக்கிழமை அன்று புதியதாக பிறக்கும் வருடம் சோபகிருது வருடம் ஆகும். சோபகிருது வருடம் என்பது தமிழில் மங்கலம் என்று பொருள்.
அதனால் இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவருக்கும் பல நன்மைகளை கொண்டு வரப்போகிறது. சரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
தமிழ் புத்தாண்டு 14.04.2023 வெள்ளிக்கிழமை அன்று பகல் 02:05 மணிக்கு பிறக்கிறது.
அதனால் அனைவரும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவோம். மேலும் வாசகர்களாகிய நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ் புத்தாண்டு படங்களை பகிர்ந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து பகிர்ந்து கொள்ளவும் 👇👇👇
==> தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
==> சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
==> தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |