Siva Manthira Payangal in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் சிவபெருமானின் ஒவ்வொரு மந்திரங்களை நாம் கூறுவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்பவர் தான் சிவபெருமான். நாமும் நம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை போக்குவதற்காக நாம வணக்கம் கடவுள்களின் மந்திரங்களை உச்சரிப்போம். அதேபோல சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படி இருக்கும் சிவபெருமானின் மந்திரங்களை பற்றியும், அந்த மந்திரம் கூறுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சிவனின் மந்திரங்களும் அவற்றின் பலன்களும்:
இப்போது நாம் பார்க்கப்போகும் சிவபெருமானின் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். அப்படி நாம் சொல்லும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும். இப்படி 108 முறை சொல்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி கீழே காண்போம்.
♦ நங்சிவயநம என்று உச்சரிக்க – திருமணத்தடை நீங்கும், திருமணம் நிறைவேறும்.
♦ அங்சிவயநம என்று உச்சரிக்க – தேகநோய் நீங்கும்.
♦ ஐயும் நமசிவய என்று உச்சரிக்க – புத்தி வித்தை மேம்படும்.
♦ நம சிவய என்று உச்சரிக்க – பேரருள், அமுதம் கிட்டும்.
♦ உங்யுநமசிவய என்று உச்சரிக்க – வியாதிகள் விலகும்.
♦ கிலியுநமசிவய என்று உச்சரிக்க – நாடியது சித்திக்கும்.
♦ சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க – கடன்கள் தீரும்.
♦ நமசிவயவங் என்று உச்சரிக்க – பூமி கிடைக்கும்.
♦ வங்சிவயநம என்று உச்சரிக்க – யோகசித்திகள் பெறலாம்.
♦ அங்சிவயநம என்று உச்சரிக்க – ஆயுள் வளரும், விருத்தியாகம்.
♦ ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
♦ கிலி நமசிவய என்று உச்சரிக்க – வசிய சக்தி வந்தடையும்.
♦ ஹிரீநமசிவய என்று உச்சரிக்க – விரும்பியது நிறைவேறும்.
♦ சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க – சந்தான பாக்யம் ஏற்படும்.
♦ சிங்றீங் என்று உச்சரிக்க – வேதானந்த ஞானியாவார் உங்றீம்.
♦ சிவயநம என்று உச்சரிக்க – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
♦ அங்நங் சிவாய என்று உச்சரிக்க – தேக வளம் ஏற்படும்.
♦ அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க – சிவன் தரிசனம் காணலாம்.
♦ ஓம் நமசிவாய என்று உச்சரிக்க – காலனை வெல்லலாம்.
♦ லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க – தானிய விளைச்சல் மேம்படும்.
♦ ஓம் நமசிவய என்று உச்சரிக்க – வாணிபங்கள் மேன்மையுறும்.
♦ ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
♦ ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க – அரச போகம் பெறலாம்.
♦ ஓம் நமசிவய என்று உச்சரிக்க – சிரரோகம் நீங்கும்.
♦ ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க – அக்னி குளிர்ச்சியைத் தரும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |