சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள் | Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil..!

Advertisement

சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள் | Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil..!

நாம் இன்றளவும் வணங்கி கொண்டிருக்கும் சிவன் தான் ஆரம்பத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என இத்தகைய தொழில்கள் அனைத்தையும் சிவனே செய்து வந்தார். அதன் பிறகு படைத்தலுக்கு உரிய தொழிலை பிரம்மரிடமும், காத்தலுக்கு உரிய தொழிலை விஷ்ணுவிடமும் கொடுத்து விட்டு அழித்தலுக்கு உரிய தொழிலை மட்டுமே இவர் செய்து வந்தார். இப்படிப்பட்ட கதையினை கொண்ட சிவபெருமானை நாம் மற்ற நாட்களை காட்டிலும் அதிகமாக பிரதோஷம், திருக்கார்த்திகை என இத்தகைய தினங்களில் தான் அதிகமாக வணங்கிக்கிறோம். ஏனென்றால் இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்பதும் ஒரு ஐதீகமாக ஆன்மீகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் சிவனுக்கு உரிய சிவமயமாக தெரிகிறதே என்ற பாடல் வரிகளை பார்க்கலாம் வாங்க..!

தாமோதராஷ்டகம் பாடல் வரிகள்

சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள்:

 சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள்

சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மனம் ஊறிடுதே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
யுகம் நான்கு தாண்டியே முகம் வேறு காட்டியே
ஜெகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா
யுகம் நான்கு தாண்டியே முகம் வேறு காட்டியே
ஜெகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா
சத்தியம் நீதான் சகலமும் நீதான்
நித்தியம் என்னில் நிலைப்பவன் நீதான்
அருணாச்சலா உனை நாடினேன்
அருணாச்சலா உனை நாடினேன்
சிவ லீலை செய்யாமல் சிறுஏனை ஆட்கொள்ள
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா

அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே.
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே

முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய் உனை காண்கிறேன்
முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய் உனை காண்கிறேன்
தீயெனும் லிங்கம் ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய் வான்வெளி பொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே
மனம் காண வர வேண்டும் தினந்தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே அருள்வாயப்பா
மலையான நாதனே அருள்வாயப்பா

அண்ணாமலையானே ங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மனம் ஊறிடுதே

அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே..!

சின்ன சின்ன முருகையா பாடல்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement