சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்
பொதுவாக கடவுளிடம் நாம் ஏதாவது வேண்டுதல் வைப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த வேண்டுதல் ஆனது ஒவ்வொரு கடவுளிடம் ஒவ்வொரு மாதிரியாக வைப்போம். சில பேர் குலதெய்வ கோவிலில் வேண்டுதலை வைப்பார்கள். சில பேர் அவர்களுக்கு பிடித்த கடவுளிடம் வேண்டுதலை வைப்பார்கள். இந்த வேண்டுதல் வைக்கும் போதே இந்த வேண்டுதலை நிறைவேற்றினால் நான் உனக்கு இதை செய்கிறேன் என்றும் வேண்டி கொள்வார்கள். இப்படி வேண்டி கொள்வதினால் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி கொள்வார்கள் என்ற ஆன்மிக நம்பிக்கை இருக்கிறது. இந்த வேண்டுதலில் கொடுக்கும் தானம் கொடுக்க கூடிய பொருட்கள் ஆனது ஒவ்வொரு கடவுளுக்கு உரியவையாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் சிவன் கோவிலில் தானமாக கொடுக்க கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்:
- ஆன்மிகத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் உரிய பொருட்களை வகுத்துள்ளனர். அதனால் தான் இந்த பதிவில் சிவன் கோவிலில் தானமாக கொடுக்க கூடிய பொருட்கள் பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்வோம் வாங்க..
- பொதுவாக சிவன் கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அப்படி சில கோவில்களில் விளக்கு கூட ஏற்ற முடியாமல் இருந்தால் அந்த கோவில்களுக்கு நீங்கள் விளக்கு ஏற்றுவதற்கு திரி, நல்லெண்ணெய், போன்றவை வாங்கி கொடுக்கலாம்.
- சிவன் கோவில்களுக்கு இலுப்பை எண்ணெய் வாங்கி கொடுப்பது சிறப்பானது. இந்த சிவன் கோவிகளுக்கு விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் இல்லை என்றால் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்பது அர்த்தமாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை தானம் கொடுக்கக்கூடாத பொருட்கள் மற்றும் கொடுக்க வேண்டிய பொருட்கள்
அடுத்து பிரதோஷம் மற்றும் சிவனுக்கு உரிய நாட்களில் பிரசாதம் வழங்குவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நெய் வேத்தியத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
சில பேர் வேண்டுதல்கள் வைப்பார்கள் ஆனால் அவர்களால் சிவனுக்கு எந்த பொருளையும் வாங்கி கொடுக்க முடியாது ஆனால் எனக்கு சிவபெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் சிவபெருமானின் கோவிலை சுத்தம் செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |