பெருமாள் கோவிலில் உட்கார கூடாது, சிவன் கோவிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்?

Advertisement

சிவன் பெருமாள் கோயில்

பொதுவாக பலருக்கும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் நாம் எல்லா கடவுளையும் ஒரே மாதிரியாக வணங்குகிறோம். ஆன்மிகத்தில் ஒவ்வொரு கடவுளையும் வணங்குவதற்கும் முறைகள் இருக்கிறது, அதனை பற்றி அறிந்து கொள்ளாமல் கடவுளை வணங்குகின்றோம்.

சிவன் கோவிலுக்கு பெரும்பாலானவர்கள் செல்வார்கள், அது போல சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வார்கள். இந்த இரண்டும் கோவில்களிலும் கடவுளை வணங்கும் போது சில தவறுகளை செய்கின்றனர். அவை என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

சிவன் கோவில்:

சிவன் பெருமாள் கோயில்

சிவன் கோவிலுக்கு சென்றால் சில பேருக்கு மன அமைதி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும் சில பேர் உட்காராமல் வர மாட்டார்கள். அவர்களுக்கு கோவிலில் உட்கார்ந்து எந்திருந்தால் தான் திருப்தியாக இருக்கும். ஆனால் ஆன்மிகட்ஜ்ஹில் சில கோவிலில் உட்காரலாம் சில கோவிலில் உட்கார கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது அதனை பற்றி காண்போம்.

சிவன் கோவில் சென்றால் இப்படி வணங்கி தவறு செய்யாதீர்கள்…!

சிவன் கோவிலுக்கு சென்றாள் உட்கார்ந்து விட்டு தான் வர வேண்டுமாம், ஏனென்றால் சிவன் சொத்து கொலை நாசம் என்ற பழமொழியை நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். சிவன் கோவிலில் பிரசாதத்தை தவிர வேறு எதையும் வீட்டிற்கு எடுத்து வர கூடாதாம்.

கோவிலுக்கு சென்றால் உட்கார்ந்து விட்டு துணியில் இருக்கும் தூசியை கூட கீழே உதறி விட்டு வாருங்கள்.

பெருமாள் கோவில்:

சிவன் பெருமாள் கோயில்

பெருமாள் கோவிலிலுக்கு சென்றால் உட்கார கூடாதாம், அவை ஏன் என்று அறிந்துகொள்வோம்.

ஏனென்றால் பெருமாள் கோவிலில் நீங்கள் வேண்டுகின்ற செல்வத்தை எல்லாம் அள்ளி கொடுக்கின்ற லட்சுமி தேவி இருக்கிறாள். அதனால் இந்த லட்சமியை வீடு வரைக்கும் வந்து கொடுத்து விட்டு செல்வாள். அதனால் தான் நீங்கள் கடவுளை வணங்கிய பிறகு எங்கேயும் உட்காரமல் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும்.

மேலும் பெருமாள் கோவிலில் வணங்கிய பிறகு வேற எந்த கோவிலுக்கும் செல்ல கூடாது. இந்த கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வீட்டில் வந்து தான் சாப்பிட வேண்டும்.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement