வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த சாமி போட்டோவை வீட்டில் வைத்தால் பணம் வீட்டில் தங்கவே தங்காது.!

Updated On: April 8, 2025 12:30 PM
Follow Us:
sivan photo veetil vaikalama in tamil
---Advertisement---
Advertisement

சிவன் போட்டோ வீட்டில் வைக்கலாமா

இந்துக்கள் முறையில் நிறைய சம்பிரதாயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் பார்ப்போம். அப்படி பார்க்கும் விஷயத்தில் பூஜை அறையும் ஒன்று. இந்த பூஜையறையை கட்டுவது முதல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது. அடுத்ததாக எந்த சாமி படங்கள் வீட்டில் இருக்கலாம் என்று பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. சிலர் இந்த மாதிரியான சாமி படங்களை மட்டும் தான் வைக்க வேண்டும். ஆஞ்சேநேயர் போட்டோவை வைக்க கூடாது, சிவன் போட்டோவை வைக்க கூடாது என்றெல்லாம் கூறுவார்கள்.அப்படி உங்களுக்கும் சிவன் போட்டோவை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்வி பலருக்கும்இருக்கும். உங்களுக்கு பதில் சொல்லும் பதிவாக இந்த பதிவு இருக்கும். சரி வாங்க சிவன் போட்டோவை வீட்டில் வைக்கலாமா என்று அறிந்து கொள்வோம் வாங்க..

சிவலிங்கம் வைத்து வழிபாடு:

சிவலிங்கத்தை சுத்தமான இடத்தில் வைத்து தான் வழிபட வேண்டும். தினமும் முறையான அபிஷேகம், நெய்வேத்தியம் வைத்து வழிபட்டால் மட்டுமே சிவலிங்கத்தை வைத்து வழிபட வேண்டும். சிவலிங்கம் மட்டுமில்லை எந்த ஒரு சாமி சிலையாக இருந்தாலும் அதற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரால் சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். இந்த சாமி சிலையை வெறும் வயிற்றில் வைக்க கூடாது. அப்படி வைப்பதன் அவரின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.

சிவன் படத்தை வைக்கும் போது கவனிக்க வேண்டியவை:

சிவன் போட்டோ வீட்டில் வைக்கலாமா 

சிவன் படமானது தியான நிலையில் இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாம். இதன் மூலம் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். வீட்டில் அமைதியான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் செல்வ நிலையானது அதிகரிக்கும்.

சிவபெருமானின் லிங்க வடிவத்தை வீட்டில் வைக்கலாம். இந்த மாதிரி லிங்கத்தை வைப்பதன் மூலம் வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

சிவன் சிலை அல்லது சிவன் படத்தை வைக்கும் போது வடக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனென்றால் கைலாய மலை வடக்கு திசையில் இருப்பதால் சிவன் படத்தை நம்ம வீட்டிலும் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

வீட்டில் வைக்க கூடாத சிவன் படங்கள்:

ஆன்மிகப்படி சிவன் படத்தை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமான விஷயமாக இருக்கிறது. வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். அமைதியான சூழல் ஏற்படும். சிவனின் அருள் முழுமையாக வேண்டுமென்றால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதனை பற்றி காண்போம்.

சிவ பெருமான் கோபமாக இருப்பது போலவோ அல்லது ருத்ர தாண்டவம் ஆடுவது போலவோ அல்லது சம்ஹாரம் செய்வது போன்ற படங்களை வீட்டில் வைத்து வழிபட கூடாது. தாண்டவ மூர்த்தியான நடராஜரின் படத்தையோ அல்லது சிலையையோ  வீட்டில் வைத்து வழிபட கூடாது. இந்த படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் பணவரவு இருக்காது. தாண்டவ மூர்த்தி படம் என்பது கோபமான வடிவம் இதனை வீட்டில் வைப்பதன் தீமையை தரும்.

சிவன் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதற்கான விதிமுறைகள்:

உடைந்த சிவனின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்திருக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை ஆற்றில் விட்டு விடுங்கள்.

சிவன் நின்ற வடிவத்தில் இருக்கும் படங்களை அல்லது சிலையை வீட்டில் வைக்க கூடாது.

சிவன் சிலை அல்லது படமோ வைப்பதாக இருந்தால் அதனுடன் நந்தி சேர்ந்து இருப்பது போல இருந்தால் நல்லது. குடும்பத்திற்கு மிகவும் நன்மையை தரக்கூடியதாக இருக்கும்.

சிவன் பார்வதி குடும்ப போட்டோ வீட்டில் வைக்கலாமா:

சிவன் பார்வதி குடும்ப போட்டோ வீட்டில் வைக்கலாமா

சிவன் பார்வதி இணைந்த குடும்ப போட்டோவை வீட்டில் வைக்கலாம். இதனால் வீட்டில் பல நன்மைகள் நடக்கும். மேலும் எந்த மாதிரியான கஷ்டம் வந்தாலும் அதனை தாங்குவதற்கான மன சக்தி கிடைக்கும். சிவன் பார்வதி இணைந்த போட்டோவை வைத்து வழிபடுவதன் மூலம் தைரியம் அருளாக வழங்கப்படும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now