சிவனின் பாதி உடல் என்ன தமிழில் | Sivanin Pathi Udal Enna in Tamil

Advertisement

Sivanin Pathi Udal Enna in Tamil | சிவனின் பாதி உடல் | சிவனின் பாதி உடல் பெயர் என்ன

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். சிவனின் பாதி உடல் என்ன தமிழில் (Sivanin Pathi Udal Enna in Tamil) இப்பதிவில் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.  ஆன்மீகத்தை பொறுத்தவரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பெண்கள் மற்றும் ஆண்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு நினைப்பதோடு மட்டும் இல்லாமல் சில விரதங்களையும் கடைப்பிடிக்கும் பழக்கத்தினை வைத்து இருப்பார்கள். ஏனென்றால் இவ்வாறு நாம் ஆன்மீகத்தில் விரதம் இருப்பதன் காரணமாக நாம் நினைக்கும் மற்றும் நடக்க வேண்டும் என்று நினைப்பவை எல்லாம் எளிதில் நடந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கும். இதன் படி பார்க்கையில் பிரதோஷம், சிவராத்திரி என இதுபோன்ற தினங்களில் அழித்தலுக்கு உரிய தெய்வமாகிய சிவனை நினைத்து வழிபடுவார்கள். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனாக காட்சி அளிக்கும் சிவனின் உடல் ஆனது ஒரு பக்கம், பெண்ணாகவும், மற்றொரு பக்கம் ஆணாகவும் இருக்கிறார். ஆகவே இன்றைய பதிவில் சிவனின் பாதி உடல் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

சிவனின் பாதி உடல் என்ன தமிழில் | Sivanin Pathi Udal Name in Tamil:

சிவனின் பாதி உடல் பார்வதி தேவி ஆவாள். இவ்வாறு சிவன் தன்னுடைய உடலில் பாதியாக பார்வதி தேவியின் உடலை இணைத்து கொண்டதற்கு பின்னாலும் ஒரு மிகபெரிய காரணமும், பக்தி நிறைந்த கதையும் இருக்கிறது.

 சிவனின் பாதி உடல் என்ன தமிழில்

சிவனும், பார்வதி தேவியும் ஒன்றாக அருகில் அமர்ந்து காட்சி அளித்த போது சிவ பெருமானின் மிகப்பெரிய பக்தரான ப்ருகு முனிவர் சிவனை மட்டுமே சுற்றி வந்து வழிபட வேண்டும் என்று நினைத்தார்.

இத்தகைய காரணத்திற்கான பல உருவங்கள் எடுத்தும் சிவனை மட்டுமே ஒன்றுக்கு பல முறை கீழே விழுந்து வணங்கி வழிப்பட்டார். இவற்றை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பார்வதி தேவி உனது உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தமும், சதையும் நாம் அளித்த அம்சமே என்று கூறினார்.

இதனை கேட்ட அந்த முனிவர் நீங்கள் அளித்த எதுவும் எனக்கு வேண்டாம் என்று எண்ணி உடம்பில் உள்ள சதை மற்றும் இரத்தத்தை அங்கேயே அளித்து விட்டு சிவபெருமான் அளித்த ஊன்றுக் கோலை கொண்டு வீட்டிற்கு சென்று அடைந்தார்.

பார்வதி தேவியின் மனது ஆனது இத்தகைய நிகழ்விற்கு பிறகு மிகவும் பாதிப்பு அடைந்தது. ஆகையால் அதனை சரி செய்ய வேண்டும் என்று முனிவரை கூறியதால் அம்முனிவர் ஒரு விரதத்தை கடைபிடிக்க சொன்னார்.

அந்த விரதத்தின் மூலமாக 21 நாட்கள் கழித்து சிவனிடமிருந்து சரிபாதி உரிமையை கௌரி தேவியான பார்வதி பெறலாம் என்றும் கூறினார். எனவே பார்வதி தேவியும் முனிவர் கூறிய படி கேதார கௌரி விரதத்தை மேற்கொண்ட பிறகே சிவபெருமான் கௌரி தேவியான பார்வதிக்குச் காட்சி தந்ததோடு மட்டும் இல்லாமல் தன்னுடைய மேனியில் பாதியை அன்னைக்கு தந்து அர்த்த நாரீஸ்வரர் ஆனார்.

இத்தகைய நிகழ்விற்கு நிகழ்விற்கு பிறகு சிவனின் உடலில் பாதியாக பார்வதியின் உடல் ஆனது இணைப்பட்டுள்ளது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement