தூங்கும் போது இந்த பொருட்களை அருகில் வைத்து இருந்தால் துருதஷ்டம் ஏற்படுமாம்..!

Advertisement

தூங்கும் போது அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் 

ஒரு மனிதன் நாள் முழுவதும் வேலை செய்தாலும் கூட இரவில் மட்டும் தூக்கத்தினை தான் எதிர்பார்க்கின்றான். ஏனென்றால் நமது மனதில் இருக்கும் கஷ்டம் மற்றும் உடல் அசதி என இந்த இரண்டினையும் நீங்கச் செய்து மனா அமைதியினை அளிப்பது தூக்கம் மட்டுமே. அந்த வகையில் இரவில் நாம் சரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் மறுநாள் காலையில் எப்போதும் போல இருக்க முடியாது. அதனால் நாம் அனைவருக்கும் தூக்கம் என்பது மிகவும் முக்கியம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனைவரும் தூங்க போகும் போது தலைக்கு தலையணை வைத்து தூங்குவார்கள். அதேபோல் தலையணைக்கு அருகில் போன், தைலம் மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துக் கொண்டும் தூங்குவார்கள். ஆனால் இவ்வாறு நாம் வைத்து இருப்பதில் சில பொருட்கள் நமக்கு துருதஷ்டத்தை அளிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.!

வீட்டில் வற்றாத பணவரவை ஏற்படுத்தும் 5 ரூபாய் கடுகு பரிகாரம் 

Sleeping With Unlucky Things:

பணம்:

பணம்

இரவில் நாம் தூங்கும் போது பணத்தினை தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது. ஏனென்றால் பணம் என்பது குபேரர் மற்றும் மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்று ஆன்மீகத்தில் கூறுவார்கள்.

ஆகையால் இந்த பொருள் தலையணைக்கு அடியிலோ அல்லது தூங்குவதற்கு அடியிலோ வைப்பது பணத்தினை அவமதிப்பது போல இருப்பதனால் நமக்கு வீட்டில் பணக் கஷ்டம் ஆனது அதிகமாக ஏற்படுமாம். மேலும் தங்க நகைகளையும் வைத்துக் கொள்ள கூடாது.

செருப்பு:

செருப்பு

நமது கால்களுக்கு பாதுகாப்பாக பயன்படுத்தும் செருப்பினை தலைக்கோ அல்லது தலையணை போலவோ வைத்துக் தூங்கக்கூடாது. ஏனென்றால் நமது தலையில் கை வைத்து தான் பெருமாள் ஆசிர்வாதம், பெரியோரின் ஆசிர்வாதம் மற்றும் கடவுள் பிரசாதம் என இவற்றை எல்லாம் அளிப்படுகிறது.

ஆகையால் இப்படிபட்ட செயல்களை செய்து கொண்டிருக்கும் போது செருப்பினை தலைக்கு வைப்பது கஷ்டங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்..

புத்தகம்:

புத்தகம்

புத்தகத்தை தலையணையாகவோ அல்லது தலையணைக்கு அருகிலோ வைத்து இருப்பதன் மூலம் நமக்கு மனக் கஷ்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

தண்ணீர்:

தண்ணீர்

தூங்கும் போது அருகில் தண்ணீர் வைத்துக்கொள்ள கூடாது. ஏனென்றால் நாம் நிம்மதியாகவும், அமைதியாகவும் தூங்க வேண்டும் என்பது சந்திர பகவானின் ஆசை என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

அதனால் தண்ணீரை அருகில் வைப்பதன் மூலம் கோபம் உண்டாகும் என்றும் நிம்மதியான தூக்கமும் இருக்காது என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement