2025 சூரிய கிரகணம் நேரம் மற்றும் தேதி
இன்றைய பதிவில், இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கடைசி சூரிய கிரகணத்தை பற்றி பார்க்க போகின்றோம். சூரிய கிரகணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் 2 மற்றும் 3 முறை வரக் கூடும். இந்த சூரிய கிரகணம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் சூரிய ஒளி முழுமையாக பூமியை அடைவதை தடுக்கிறது.சந்திரனின் நிழல் பூமியில் விழுவதால் சூரியனின் ஒரு’பகுதி மட்டுமே தெரியும்.இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. சூரிய கிரகணத்தை பார்க்கும் போது சூரிய கண்ணாடியை போட்டு பார்க்கவும்.
மேலும், சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன்மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. 2025 மொத்தம் 2 பகுதி நேர சூரிய கிரகணங்கள் நிகழ உள்ளன என்பதை நாசா தெரிவித்துள்ளது. இந்த பதிவில் இப்போது நடக்க இருக்கும் 2வது சூரிய கிரகணத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..
2025 சூரிய கிரகண நேரம்:

2025 ஆம் ஆண்டில் இரண்டாவது சூரிய கிரகணம் ஞாயிற்று கிழமை செப்டம்பர் 21 தேதி அன்று இரவு 10.59 PM மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை செப்டம்பர் 22 அதிகாலை 03.23 AM வரை இருக்கிறது.
முதல் சூரிய கிரகணம்:
சூரிய கிரகணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் 2 மற்றும் 3 முறை வரக் கூடும். அந்த வகையில் இந்த வருடம் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 அன்று இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இது சனிக்கிழமை பகல் 2.20 PM தொடங்கி மாலை 06.13 வரை இந்த கிரகணம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியவில்லை. இந்த சூரிய கிரகணத்தை நியூசிலாந்தில் மட்டுமே பார்க்க முடிந்தது.
சூரிய கிரகணம் அன்று இந்த செயல்களை மறந்தும் செய்து விடாதீர்கள்..!
இரண்டாம் சூரிய கிரகணம்:
இப்போது நடக்க இருக்கும் 2வது சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21 தேதி அன்று இரவு 10. 59 PM மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 22 அதிகாலை 03.23 AM வரை இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இதை நியூசிலாந்தில் மட்டுமே பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணம் பகுதியளவு மட்டுமே தெரியும். இந்த சூரிய கிரகணம் சுமார் 80 முதல் 85 சவீதம் வரை மறைக்கப்படும்.
சூரிய கிரகணம் தெரியும் பகுதிகள்:
- நியூசிலாந்து
- அண்டார்டிக்
- கிழக்கு ஆஸ்த்ரேலியா
- தென் பசிபிக் கடலில்
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்று ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைகும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












