வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் எது தெரியுமா.?

Advertisement

Words That Should Not be Spoken at Home and at Work

வணக்கம் நண்பர்களே: மனிதனாக பிறந்து விட்டால் கோவம், மகிழ்ச்சி, சிரிப்பு, கவலை, அழுகை போன்று வருவது வழக்கம் தான். சாஸ்திரத்தின் படி, நம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் வல்லமை உண்டு. அதற்கு நம்  எந்த வார்த்தைகள் சொல்லி பேசுகிறோமோ அது நம் வாழ்க்கையில் அப்படியே நடக்கும். அதற்கு எந்த வார்த்தைகள் பேசினாலும் தெளிவான மனநிலையில் பேசுவது அவசியம்.  தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு’ என்று திருவள்ளுவர் அருமையான குறள் எழுதியுள்ளார். அதனால் எந்த  வார்த்தைகளை பேசக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வீட்டில் பேசக்கூடாத வார்த்தைகள்:

 spoken words can't be taken back

நம் வீடானது மகாலட்சுமி நிறைந்து உள்ள இடமாக இருப்பதால், பொருள் கேட்டால் இல்லை என்று சொல்லக்கூடாது. தனத்திலும், தானியத்திலும் நிறைந்து இருப்பது மகாலட்சுமி ஆகும். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை இல்லை என சொல்லக்கூடாது. வீட்டில் பணம் இல்லை, உப்பு இல்லை, அரிசி இல்லை என சொல்ல கூடாது. பணத்தை வாங்க போகிறேன், பணம் வர வேண்டும், அரிசி வாங்க போகிறேன் என்று நல்ல வார்த்தைகளாக பேசுவது நல்லது.

ஆன்மீக தகவல்கள்..! Aanmeega Thagaval in Tamil..!

தொழில் செய்யும் இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகள்:

அதிகமாக கோபம் வருகிறது

வீட்டிலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி சனியன் என்ற வார்த்தையை எக்காரணமாக இருந்தாலும் சொல்லக்கூடாது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மற்றும் பணி செய்யும் இடத்தில் சனியன் என்று சொல்ல கூடாது.

மூதேவி :

மூதேவி ஏன் சொல்லக்கூடாது

அது போல் வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் மூதேவி என்ற சொல்லை பயன்படுத்த கூடாது. மூதேவி என்ற வார்த்தையை அதிகம் சொல்வதால் மகாலட்சுமி தங்க  மாட்டாள். நம்மிடம் இருந்த செல்வம் கூட இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

யமனுடைய மனைவி ‘ ஜய்யோ’ என்று சொல்லப்படுகிறார்கள். அதனால் வீடு மற்றும் தொழில் செய்யும் இடம்,  அல்லது வருமானம் ஈட்டக்கூடிய இடத்தில் ‘ஜய்யோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தால் சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தம்.

எல்லா சமயத்திலும் இந்த வார்த்தையை சொல்வது இல்லை. பேசும் பொழுது இந்த மாதிரியான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

ஆன்மிகம் என்றால் என்ன? அதை பற்றிய சில தகவல்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement